வீரர்கள் ஓய்வு பிரச்சனை.. இனி யாரும் தப்பிக்க முடியாது.. பிசிசிஐ வெளியிட இருக்கும் அறிவிப்பு

0
251
BCCI

உலகக் கிரிக்கெட்டில் தற்போது அதிக போட்டிகளில் விளையாட கூடிய வீரர்களாக இந்திய வீரர்கள் இருக்கிறார்கள்.

மேலும் இந்திய கிரிக்கெட் இன்னும் ஒவ்வொரு வடிவத்திற்கும் தனித்தனி அணிகளை உருவாக்கும் அளவுக்கு முன்னோக்கி செல்லவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக சில குறிப்பிட்ட வீரர்கள் மூன்று வடிவத்திலும் இந்திய அணிக்காக விளையாட வேண்டியதாக இருக்கிறது. இதன் காரணமாக பணிச்சுமையை நிர்வகிக்க வேண்டி அவர்கள் ஓய்வெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

அதே சமயத்தில் இப்படி வீரர்கள் தொடர்ந்து விளையாடுவது காயம் அடைகின்ற வாய்ப்பை அதிகப்படுத்தக் கூடியதாக அமைகிறது. எனவே பிசிசிஐ சில விஷயங்களில் சில உறுதியான முடிவுகளை எடுக்க இருப்பதாக செய்திகள் வருகிறது.

பணிச்சுமை அதிகமாக இருக்கின்ற வீரர்கள் ஓய்வில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. முக்கியத்துவம் இல்லாத தொடர்களில் பணிச்சுமை அதிகம் இருக்கின்ற வீரர்கள் சுழற்சி முறையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் போல் ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

அதே சமயத்தில் பணிச்சுமை பெரிய அளவில் இல்லாத வீரர்கள் ஓய்வில் இருக்க முடியாது. இந்திய அணிக்கு வெளியில் இருக்கும் வீரர்கள் அந்தக் காலகட்டத்தில் நடக்கும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிங்க : சர்பராஸ் கானுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. 3வது டெஸ்டில் நட்சத்திர இந்திய வீரர் விலகல்

குறிப்பாக இசான் கிஷான் மனச்சோர்வின் காரணமாக ஓய்வு கேட்டு வாங்கி வந்தார். ஆனால் அவர் ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து ஐபிஎல் தொடருக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாக பிசிசிஐ வருத்தம் அடைந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய அணிக்கு வெளியில் இருக்கும் வீரர்கள் காயம் இல்லாமல் இருந்தால் கட்டாயம் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதாக தெரிகிறது.