இந்திய தொடரை விட்டு விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?.. வெளியான முக்கிய செய்தி.. கவலையில் இங்கிலாந்து ரசிகர்கள்

0
410
Stokes

தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுகிறாரா? என்கின்ற செய்தி தீவிரமாக பரவி வருகிறது.

தற்போது பென் ஸ்டாப்ஸ் 105 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் ஜோ ரூட் உடன் இணைந்து நின்று கொண்டிருக்கிறார். இன்று துவங்கும் இரண்டாவது நாள் ஆட்டத்தில் அவர் களம் இறங்கி விளையாடுவாரா? என்கின்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் காயம்

சர்வதேச கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ்க்கு தொடை மற்றும் அடிவயிற்றில் தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக அவர் சில முக்கியமான தொடர்களை நடுவில் இழக்க வேண்டியதும் இருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மிக முக்கியமான ஆசஸ் தொடருக்காக காயத்தில் இருந்து கடுமையாக உழைத்து திரும்பி வந்திருக்கிறார்.

நேற்று 34 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென அடிவயிற்றில் ஏற்பட்ட வலியின் காரணமாக பென் ஸ்டோக்ஸ் அவதிப்பட்டார். தொடர்ந்து அவரால் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடி ரன்கள் எடுக்க முடியவில்லை. எனவே இன்று திரும்பி வந்து அவர் விளையாடுவாரா? மொத்தமாக தொடரை விட்டு வெளியேறுவாரா? என்பது குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஒல்லி போப் தகவல்

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வீரர் ஒல்லி போப் பென் ஸ்டோக்ஸ் காயம் குறித்து கூறும் பொழுது ” தற்போது விரல்களை குறுக்காக வைத்திருக்கிறோம். ஆனால் அவர் ஏதாவது மாயாஜாலங்கள் செய்து நாளை திரும்பி வந்து விளையாடி விடுவார் என்று நினைக்கிறேன். மேலும் தற்போது அவரை இதுவரையில் பார்க்க முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : என் பவுலிங் சிறப்பாக காரணமே கம்மின்ஸ்தான்.. அவர் எனக்கு இந்த உதவிய செஞ்சாரு – நிதீஷ் குமார் ரெட்டி பேட்டி

சமீப காலத்தில் பென் ஸ்டோக்ஸ் களத்தில் காயம் அடைந்தால் மீண்டும் திரும்பி வருவது சிரமமாகவே இருந்திருக்கிறது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் களத்தில் காயம் அடைந்து வெளியேறியவர் மீண்டும் திரும்பவில்லை. எனவே இங்கிலாந்து கேப்டனின் காயம் கவலை அளிப்பதாக இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -