தன்னுடைய பந்துவீச்சு சிறப்பாக மாறுவதற்கான காரணம் ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு தனக்கு கேப்டனாக இருக்கும் கம்மின்ஸ்தான் என நிதீஷ் குமார் ரெட்டி கூறியிருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில், பதினான்காவது ஓவரை வீச வந்த நிதிஷ்குமார் ரெட்டி இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி அசத்தினார். மேலும் நேற்று பந்துவீச்சில் மிகவும் கட்டுப்பாடாகவும் இருந்தார்.
கம்மின்ஸ்தான் காரணம்
இதுகுறித்து நிதீஷ் குமார் ரெட்டி பேசும் பொழுது ” ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை முடித்து விட்டு வந்த பொழுது எனது பந்து வீச்சை நிலைத்தன்மை கொண்டதாக வைப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தேன். நான் அப்பொழுது கம்மின்ஸ் இடம் சில குறிப்புகள் கேட்டேன். ஆஸ்திரேலியாவில் எந்த முறையில் பந்து வீசினால் சிறப்பாக இருக்கும் என அவர் எனக்கு கூறி வருகிறார்”
“மேலும் நான் ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்தில் பந்து வீசுவது எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பது குறித்தும் அவரிடம் கேட்டு வருகிறேன். அவர் அதற்கு பெரிய வித்தியாசங்கள் எதுவும் இருக்காது ஆனால் வானிலையை பார்த்து நிலைத்தன்மையுடன் பந்து வீசுமாறு என்னிடம் கூறியிருக்கிறார்”
மோர்னே மோர்கல் உடன் வேலை
“மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் போது மோரனே மோர்கல் உடன் இணைந்து வேலை செய்வதும் சிறப்பானது என்று நான் சொல்லுவேன். அவர் என்னுடன் இரண்டு வாரங்களாக வேலை செய்து வருகிறார். இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நான் அவருடன் வேலை செய்வதை மிகவும் ரசிக்கிறேன்”
இதையும் படிங்க : ரொம்ப பில்டப் பண்ணாதீங்க.. அப்படி அவர் என்ன சாதிச்சார்னு எனக்கு தெரியணும்.. இங்கி வீரரை விமர்சித்த அஸ்வின்
“எனக்கு பந்தின் இருபுறமும் ஸ்விங் கிடைக்கிறது. எனவே நான் பந்தை ஒரே இடத்தில் வீசுவதற்கு நிலைத்தன்மையில் தொடர்ந்து உழைத்து வருகிறேன். இரண்டு வருடங்களாக இதற்காக நான் நிறைய முயற்சி செய்து உழைத்துக் கொண்டு இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






