ரோகித் சர்மா மற்றும் கில் இடையே விரிசலா.. இந்தியா திரும்பும் சுப்மன் கில்.. காரணம் என்ன.?

0
182

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இன்று நடைபெற உள்ள கடைசி லீக் போட்டியில் கனடா அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கு அடுத்ததாக அமெரிக்காவிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் கிளம்பும் இந்திய அணி சூப்பர் 8 சுற்று போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த சூழ்நிலையில் ரிசர்வ் பட்டியலில் இருக்கும் வீரரான சுப்மான் கில்லை மட்டும் இந்தியா அனுப்ப அணி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அப்போது ரிசர்வ பட்டியலில் ரிங்கு சிங், சுப்மான் கில், ஆவேஸ் கான் மற்றும் கலீல் அகமது ஆகிய வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் சுப்மான் கில் ரிசர்வ் வீரராக இடம் பெற்று இருந்தபோதே சர்ச்சைகள் எழுந்தது. ஏனென்றால் அப்போது நடைபெற்று இருந்த ஐபிஎல் போட்டியிலும், அதற்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளிலும் சுமாரான பங்களிப்பையே கில் வெளிப்படுத்தி இருந்தார்.

இருப்பினும் இளம் வீரரான அவரது திறமையை கருத்தில் கொண்டு அவரை அணி நிர்வாகம் மீண்டும் சேர்த்தது. இந்திய அணியோடு ரிசர்வ் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்த நான்கு வீரர்களும் அமெரிக்கா சென்று அங்கு இந்திய அணியினருடன் பயிற்சி மேற்கொண்டனர். கில்லை தவிர மற்ற மூன்று வீரர்களின் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது.

ஆனால் கில்லின் புகைப்படமோ அவர் பயிற்சி பெறும் வீடியோக்கள் இதுவரை இணையதளத்தில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இந்திய நிர்வாகம் கில் பயிற்சியின்போது தேசியக் கடமைகளில் கவனம் செலுத்தாமல்,அவரது தனிப்பட்ட வேலைகளிலும், வணிக ரீதியான விஷயங்களிலும் ஈடுபட்டதால் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவரை அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் இதன் எதிரொளியாக கில் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை அன்பாலோ செய்துள்ளார். இதன் மூலம் இந்த தகவல் உண்மை என்பதை அனைவராலும் நம்பப்படுகிறது. அமெரிக்காவின் டாலஸ் நகரில் கனடா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இந்தியா விளையாடும் முடித்தவுடன் கில் இந்தியா திரும்புவார் என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது.

இதையும் படிங்க:விராட் கோலியை விட என் தம்பி உமர் சிறந்தவன்.. நேத்துதான் ஆதாரங்கள் கிடைச்சது – கம்ரன் அக்மல் பேச்சு

லீக் போட்டிக்கு பிறகு சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீசில் பங்குபெறும் இந்திய அணியில் மற்ற மூன்று ரிசர்வ் வீரர்கள் அணியுடன் சேர்ந்து பயணிப்பார்கள். ஒருவேளை இந்திய அணி வீரர்கள் காயங்களால் பாதிக்கப்படும் நிலையில் ரிசர்வ் பட்டியலில் இடம் பெற்ற வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.