சாம்சன் சிஎஸ்கேவுக்கு இல்ல எங்களுக்கு தான்.. கேகேஆர் விரித்த ஆசை வலை.. உச்சகட்ட போட்டி – வெளியான தகவல்கள்

0
39
Sanju

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை டிரேடிங் செய்ய கே கே ஆர் அணி முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இதற்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இதற்காக ருத்ராஜ், ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே போன்ற பெரிய வீரர்களை ராஜஸ்தான் அணி நிர்வாகம் கேட்டதாகவும் கூறப்பட்டது.

- Advertisement -

காத்திருக்கும் கொல்கத்தா

சிஎஸ்கே அணியை விட கொல்கத்தா அணிக்கு சஞ்சு சாம்சன் மிகவும் தேவையான வீரராக இருக்கிறார். தற்போது அவர்களுக்கு ஒரு விக்கெட் கீப்பிங் துவக்க ஆட்டக்காரர் தேவைப்படுகிறது. தற்போது இதற்கு குயிண்டன் டி காக் மற்றும் குர்பாஸ் என இரண்டு வெளிநாட்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நல்ல தாக்கத்தையும் உருவாக்கவில்லை.

இந்த இடத்திற்கு பஞ்சு சாம்சன் மாதிரியான ஒரு இந்திய விக்கெட் கீப்பரை கொண்டு வரும் பொழுது, துவக்க இடத்திற்கு வலிமையான வீரர் கிடைப்பார். மேலும் இந்திய வீரர் என்பதால் பந்து வீச்சு யூனிட்டில் ஒரு வெளிநாட்டு வீரரை சேர்ப்பதற்கு வசதியாக இருக்கும். இதனால் சஞ்சு சாம்சனுக்காக கொல்கத்தா அணி காத்திருக்கிறது.

- Advertisement -

கொல்கத்தா காட்டும் ஆசை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை வாங்குவதற்கு இளம் வீரர்கள் ரகுவன்சி மற்றும் ரமன் தீப் சிங் ஆகியோரை தருவதாக கொல்கத்தா அணி கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. இது ராஜஸ்தான் அணிக்கு எந்த விதத்தில் பயனாக இருக்கும் என்று பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : விராட் கோலி ஓய்வு விஷயத்துல நடந்தது அற்ப அரசியல்.. பிசிசிஐ அசிங்கமா செஞ்சது – இந்திய முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

ராஜஸ்தான் அணிக்கு தற்போது கீழ் வரிசையில் ஃபினிஷிங் செய்வதற்கு நல்ல வீரர் வேண்டும். இதே போல தரமான வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் பொழுது வேறு எந்த வீரையாவது ராஜஸ்தான் கொல்கத்தாவிடம் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -