இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அற்ப அரசியலால் கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என இந்திய முன்னால் வீரர் கர்ஷன் காவ்ரி கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக திடீரென இந்திய டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார்கள். குறிப்பாக விராட் கோலி இன்னும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதியோடு இருந்தும் ஓய்வை அறிவித்தார்.
ரஞ்சி கிரிக்கெட் மர்மங்கள்
இதற்கு முன்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் அனைவரையும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கெடுக்க சொன்னது. இங்கிலாந்து தொடருக்கும் முன்பாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடினார்கள். எனவே அவர்கள் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரோகித் சர்மா மிக உறுதியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் திடீரென இருவருடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிக்கைகள் அடுத்தடுத்து வெளியில் வந்தன. இதற்குப் பின்னணியில் இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அரசியல்தான் என தற்போது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
பிசிசிஐ அரசியல்
இதுகுறித்து கர்சன் காவ்ரி பேசும்பொழுது “நிச்சயமாக விராட் கோலி ஈசியாக இந்தியாவுக்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடியிருக்க வேண்டும். ஆனால் அவரை ஏதோ ஓய்வு பெற கட்டாயப்படுத்தி இருக்கிறது. அவருக்கு பிசிசிஐ பிரியாவிடை கூட அளிக்கவில்லை. இப்படி பெரிய சாதனைகள் செய்த ஒரு வீரரை நியாயமாக வழி அனுப்பி இருக்க வேண்டும்”
இதையும் படிங்க : ஆசிய கோப்பை இந்திய அணி.. எனக்கு இந்த மாதிரி பிளேயர் மட்டும் வேணாம்.. அடம் பிடிக்கும் கம்பீர் – வெளியான தகவல்கள்
“விராட் கோலி ரஞ்சியில் டெல்லி பயிற்சியாளரிடம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நான்கு சதங்கள் அடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார். மைக்கேல் கிளார்க் உடனான உரையாடலில் ரோகித் சர்மா இங்கிலாந்து டெஸ்ட் தொடரை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறினார். ஆனால் பிசிசிஐ அற்ப அரசியல் இவர்களை ஓய்வு பெற வைத்துவிட்டது. இதில் பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவுக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






