இந்திய அணிக்கு குட் நியூஸ்.. 2 புது வீரர்கள் வரப்போறாங்க.. எல்லா பிரச்சனையும் முடிந்தது – வெளியான புதிய செய்திகள்

0
5
Abhishek

தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் ஒரு முழு அணியாக இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது. பாகிஸ்தான அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணிக்கு இது மிகப்பெரிய முன்னிலையை கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

இந்திய அணி நாளை டெல்லி மைதானத்தில் நமீபியா அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை சென்று கொழும்பு மைதானத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி விளையாடுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக முக்கியமான போட்டியாக இது அமைந்திருக்கிறது.

- Advertisement -

வீரர்களின் காயம்

தற்போது இந்திய அணியில் அபிஷேக் சர்மா காய்ச்சல் காரணமாக நாளை விளையாட மாட்டார் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக அவர் நேற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டது. பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக அவர் குணமடைந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே காய்ச்சலில் இருந்த பும்ரா நாளைய போட்டியில் விளையாடுவது உறுதி என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அணியின் பௌலிங் யூனிட் ஒட்டுமொத்தமாக வலிமையாக மாறி இருக்கிறது. நாளைய போட்டியில் முகமது சிராஜ் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

இன்னொரு முக்கிய செய்தி

இதைத் தாண்டி இன்னொரு மிக முக்கிய விஷயமாக நியூசிலாந்து ஒருநாள் தொடரில் காயம் அடைந்திருந்த வாஷிங்டன் சுந்தர் தற்பொழுது முழுவதுமாக குணமடைந்து முழு உடல் தகுதியை எட்டி விட்டார் என்கின்ற செய்தி வெளியாகியுள்ளது. அவர் நாளைய போட்டியில் விளையாடுவதற்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நான் உறுதியா சொல்றேன்.. ஆப்கானிஸ்தான் இந்த மாதிரி வரப்போகுது.. சலிக்கவே முடியாது – சச்சின் பாராட்டு

நடப்பு உலகக் கோப்பை தொடரில் போட்டிகள் செல்ல செல்ல ஆடுகளங்கள் உடைந்து சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாஷிங்டன் சுந்தர் காயம் குணமடைந்து அணிக்கு திரும்பி இருப்பது பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அவர் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பது இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

- Advertisement -