இன்று டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு முறை சூப்பர் ஓவர்களுக்கு சென்று கடுமையாக போராடி இறுதியில் தோல்வி அடைந்தது. இந்த போட்டி பற்றி இந்திய முன்னாள் நட்சத்திர வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் பாராட்டி பேசி இருக்கிறார்கள்.
மேலும் இதுவரையிலான சர்வதேச டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இரண்டு முறை சூப்பர் ஓவர்கள் நடந்தது கிடையாது. இந்த வரலாற்றில் முதல்முறையாக இரண்டு சூப்பர் ஓவர்கள் நடைபெற்று இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சி
தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் ஆசியாவில் ஆப்கானிஸ்தான அணி இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிறந்த அணியாக இருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் கடைசியில் தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக அந்த அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது என்று கூறலாம்.
சச்சின் யுவராஜ் வாழ்த்து
இந்த போட்டி குறித்து பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர் “ஒரே நாளில் ஒரே போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள். சலிப்பு என்பதே இருக்க முடியாது. வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இப்போட்டியை அமைதியாக இருந்து கொண்டு சென்று முடிக்க மன உறுதி தேவை. இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆபத்தான அணியாக மாறும் திறன் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : IND vs NAM.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அபிஷேக் ஆடுவாரா? பாகிஸ்தான் போட்டிக்கு ஸ்கெட்ச் – முழு அலசல்
யுவராஜ் சிங் தன்னுடைய வாழ்த்து பதிவில் “குர்பாஸ் இந்த தோல்வியால் நீங்கள் சோர்வடைய வேண்டாம். கடத்திப் பந்து வரையில் உங்கள் அணிக்காகவும் உங்கள் நாட்டுக்காகவும் நீங்கள் போராடினீர்கள். இப்படிப்பட்டவர்களைதான் மேஜிசியன் என்று அழைப்பார்கள். தென் ஆப்பிரிக்காவின் வெற்றியை விட உங்களுடைய தோல்விதான் பெரிய அளவில் பேசப்படும்” என்று கூறியிருக்கிறார்.






