நடராஜனுக்கு பதிலாக ஹைதராபாத் அணியில் இணைய வாய்ப்புள்ள 6 வீரர்களின் பட்டியல்

0
295
Replacement Options for Natarajan in IPL 2021
Photo Source: Twitter

நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து, அதனுடைய நான்காவது போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தன்னுடைய முதல் வெற்றியை அண்மையில் பெற்றது. அந்தப் போட்டியில் தங்கராசு நடராஜன் விளையாட வில்லை.

அவர் இதனால் விளையாட வில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அணி நிர்வாகம் அவர் தற்போது முழங்கால் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளது. மேலும் இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் அவளால் விளையாட முடியாது என்கிற செய்தியையும் கூறியுள்ளது.

எனவே தங்கராசு நடராஜனுக்கு மாற்று வீரராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி யாரை தேர்ந்தெடுக்க போகிறது என்கிற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஒருவேளை ஹைதராபாத் அணி தேர்ந்தெடுத்தால் அந்த வீரர் இவர்களும் ஒருவராகத்தான் இருக்கும், அவர்கள் யார் என்று பார்ப்போம்

6. கே பி அருண் கார்த்திக்

நடராஜன் வேகப்பந்து வீச்சாளர் எனவே அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளரை தான் எடுக்க வேண்டும் என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் அணியில் ஏற்கனவே பல வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில் தற்போது அந்த அணிக்கு திரைப்படம் ஒரு நல்ல பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்.

அந்த வகையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன கே பி அருண் கார்த்திக் தமிழ்நாடுக்காக உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடியவர். எனவே அவரை மாற்று வீரராக எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 

5. மோகித் சர்மா

சென்னை அணிக்காக மிக அற்புதமாக விளையாடிய வீரர்களில் ஒருவர் மோகித் சர்மா. 2014 ஆம் ஆண்டு அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்ப்பில் கேப்பை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய அவரை ஏதோ ஒரு காரணமாக டெல்லி அணி தங்களது அணியில் இருந்து வெளியேற்றியது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. இருப்பினும் அவரது அனுபவம் மற்றும் திறமையை கருத்தில் கொண்டு ஹைதராபாத் அணி அவரை மாற்று வீரராக தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

4. பாபா அபராஜித்

தமிழ்நாடு அணிக்காக மிகச்சிறந்த வகையில் விளையாடிய பேட்ஸ்மேன் பாபா அபராஜித் ஆவார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன பாபா அபரஜித் ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை அணிக்காக விளையாடியவர். அதன் பின்னர் புனே வாரியர்ஸ் அணிக்காகவும் விளையாடியவர். ஆனால் என்னவோ தெரியவில்லை அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை. அதன் பின்னர் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்புக்காக காத்து வருகிறார்.

ஹைதராபாத் அணி அவரை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக தன்னுடைய திறமையை அவர் கட்டாயம் நிரூபிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

3. பிரித்திவிராஜ் யாரா

கடந்த ஆண்டு புவனேஸ்வர் குமார் காயம் அடைந்த பொழுது ஹைதராபாத் அணி இந்த வீரரை மாற்று வீரராக தேர்ந்தெடுத்தது. அதன் பின்னர் இவரை தங்களது அணியில் இருந்து வெளியேற்றி விட்டது. தற்போது மீண்டும் இவரை ஹைதராபாத் அணி தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான பிரித்திவிராஜ் யாரா உள்ளூர் போட்டிகளில் மிக சிறப்பாக பந்துவீசயவர் என்பது குறிப்பிடதக்கது.

2. கணேசன் பெரியசாமி

டிஎன்பிஎல் தொடர்  மற்றும் பல உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்காக மிக சிறப்பாக விளையாடியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணேசன் பெரியசாமி. இவரது பவுலிங் கிட்டத்தட்ட ஜாம்பவான் வீரர் லசித் மலிங்கா போல் இருக்கும். அதன் காரணமாகவே அனைவரும் இவரை இந்தியாவின் மலிங்கா என்று செல்லமாக அழைப்பார்கள். பந்து வீசும் ஸ்டைல் மட்டுமல்ல பந்துவீச்சும் மலிங்காவை போல மிக அற்புதமாக வீசுவார்.

இந்தாண்டு கடந்த ஐபிஎல் இறுதி வரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. இவரை ஹைதராபாத் அணி தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக நல்ல முடிவாக இருக்கும்.

1. துஷார் தேஷ்பாண்டே

கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடியவர் தேஷ்பாண்டே ஆவார். சில போட்டிகளில் விளையாடி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும் சில விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவரை ஹைதராபாத் தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக நடராஜனுக்கு ஒரு சிறந்த மாற்று வீரராக வலம் வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.