4 ஓவரில் 15 ரன்களுக்கு 5 விக்கெட்.. இங்கிலாந்து பெண்கள் அணியை மிரட்டிய ரேணுகா சிங்!

0
1228

இங்கிலாந்து பெண்கள் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பந்துவீச்சில் மிரட்டினார் ரேணுகா தாக்கூர் சிங். இந்திய பெண்கள் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலக கோப்பையில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இன்று லீக் போட்டியில் மோதி வருகின்றன.

- Advertisement -

போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பந்துவீசிய இந்திய பெண்கள் அணி, 29 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியது. அதன் பிறகு நாட் ப்ரண்ட் மற்றும் ஹீதர் நைட் இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர்.

28 ரண்களுக்கு ஹீதர் நைட் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ப்ரண்ட் உடன் எமி ஜோன்ஸ் ஜோடி சேர்ந்து சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைக்க, இங்கிலாந்து அணி 100 ரன்கள் கடந்தது.

நன்றாக விளையாடி வந்த பிரண்ட் அரைசதம் கடந்து, 42 பந்துகளில் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த எமி ஜோன்ஸ் 27 பந்துகளில் 40 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

பின்னர் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து பெண்கள் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் அடித்திருந்தது. இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ரேணுகா தாக்கூர் சிங் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச டி20 போட்டிகளில் இதுதான் இவரது பெஸ்ட் பௌலிங் ஃபிகராக இருக்கிறது.

152 ரன்கள் இலக்கை செஸ் செய்து வரும் இந்திய பெண்கள் அணிக்கு துவக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தானா மற்றும் சவாலி வர்மா இருவரும் களமிறங்கினர். சஃபாலி வர்மா 8 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 6 ஓவர்களில் 41 ரன்கள் அடித்திருக்கிறது இந்திய பெண்கள் அணி. களத்தில் ஸ்மிருதி மந்தானா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்வெஸ் இருவரும் விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். குரூப் ஏ வில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் அணியையும் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.