டிராவிட்டை பதவியில் இருந்து தூக்குங்க.. ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் சிஎஸ்கே ரசிகர்கள்.. காரணம் என்ன?

0
685
Dravid

2021 டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்ததும், நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு பயிற்சியாளராக அந்த முதல் தொடரே தோல்வியாக அமைந்தது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளையும் தென் ஆப்பிரிக்க அணியிடம் இழந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து 2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மற்றும் அந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி இழந்தது. மேலும் பங்களாதேஷ அணிக்கு எதிராகவும் அந்த நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இழந்து இருந்தது.

மேலும் இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில் அஸ்வினை அணியில் எடுக்காமல் விளையாடி இந்திய அணி தோற்றது. இது மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது.

இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீஸ் சென்று விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட வைக்காமல் போனது, ராகுல் டிராவிட் மீதான பெரிய விமர்சனங்களை கொண்டு வந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய போதும், இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையை வென்றது மட்டுமே அவரது பயிற்சியின் கீழ் சிறப்பான வெற்றியாக இருக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் சதத்துடன் அதிக ரன்கள் குவித்தவராக வந்த ருதுராஜுக்கு, தென் ஆப்பிரிக்கா டி20 தொடரின் இரண்டு போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அணிக்கு திரும்பிய கில்லுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் இரண்டு வாய்ப்புகளிலும் சொதப்பி இருக்கிறார்.

இதன் காரணமாக ருதுராஜ் ஐபிஎல் தொடரில் இடம் பெற்று விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள், ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று “சேக் டிராவிட்” என்கின்ற ஹேஸ்ஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தற்பொழுது சமூக வலைதளத்தில் இது வைரலாக பரவி வருகிறது!