“2018 ஞாபகம் இருக்கா?” கோலி பற்றிய ரமீஷ் ராஜா பேச்சுக்கு இர்பான் பதான் தரமான பதிலடி.. எஸ்கேப் ஆகிய மனிதர்!

0
539
Irfan

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் மிகவும் கவனம் ஈர்க்கக் கூடிய தொடராக இருக்கிறது. டி20 கிரிக்கெட் உச்சமான வரவேற்பை பெற்றிருக்கும் நேரத்தில் நடக்கின்ற தொடர் என்பதால் முக்கியத்துவம் அதிகமாகிறது!

மேலும் ஒரு நாள் கிரிக்கெட் வடிவம் எல்லா வீரர்களுக்கும் சரியான ஒன்றாக இருப்பது கிடையாது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டுக்கு பழகிய வீரர்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட் என்பது மிகவும் கடினமான ஒன்று.

- Advertisement -

இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவம் மிகவும் சரியான ஒன்றாக இருக்கும்.

இதன் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் தற்போதைய சூழ்நிலையில் எந்த அணி பலமாக இருக்கிறது? என்று கூறுவதற்கு கடினமாக இருக்கிறது. உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பலமான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த போதிலும் நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது. காரணம் டி20 அணுகு முறையில் பேட்டிங் செய்ததால்தான்.

எனவே நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் எப்படி செயல்படுவார்கள்? என்று பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதே சமயத்தில் இந்திய மண்ணில் நடைபெறுவதால் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் பேட்டிங் செயல்பாடு பற்றிய அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஷ் ராஜா ஒரு உரையாடலில் விராட் கோலி பற்றி கூறுகையில் ” விராட் கோலிக்கு வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணி இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் வரிசை பலவீனமாக இருக்கிறது. விராட் கோலிக்கு கிடைக்கும் சப்போர்ட் பாபருக்கு கிடைப்பதில்லை!” என்று கூறினார்!

இதற்கு உடனே பதில் அளித்த இர்பான் பதான் ” 2018 ஆம் ஆண்டு வரை ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் ஐந்து இடத்தில் விராட் கோலி மட்டும்தான் இந்தியராக இருந்தார். அதே சமயத்தில் 2020 முதல் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், முதல் ஐந்து இடத்தில் மூன்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் இருந்தார்கள்!” என்று தரமான பதிலை கூறினார். இதற்கு ரமீஷ் ராஜாவால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் உடனே இந்த உரையாடலை நிறுத்தி வேறு பக்கமாக சென்றுவிட்டார்!