பாகிஸ்தானை குறைச்சு மதிப்பிடாதிங்க.. இவங்க 5 பேர்ல ஒருத்தருக்கு தான் உ.கோ – பீட்டர்சன் உறுதியான கணிப்பு!

0
1055
Pieterson

கிரிக்கெட் தற்பொழுது ஐசிசி போட்டிகளில் மூன்று வடிவங்களில் பரிணாமம் எடுத்திருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் ஐசிசி பத்து ஓவர் கிரிக்கெட்டை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு கிடையாது.

தற்பொழுது ஐசிசி மூன்று வடிவ கிரிக்கெட்டிற்கும் உலகக் கோப்பைகளை நடத்துகிறது. டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பைத் தொடர் நடைபெறுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை மட்டும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஐசிசி நடத்துகிறது. கொஞ்சம் நீண்ட கிரிக்கெட் வடிவம் என்பதாலும், மற்ற வடிவங்களை விட நீண்ட காலம் கழித்து உலகக் கோப்பை நடைபெறுவதாலும், இதுவரை 12 பெரிய ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்று, அதில் பல அருமையான சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாலும், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு எப்பொழுதும் ரசிகர்களிடையே பெரிய மதிப்பு இருக்கிறது.

இதன் காரணமாக எப்பொழுதும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நெருங்க நெருங்க, ரசிகர்களுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தின் மீதான காய்ச்சல் அதிகமாக தொற்றிக் கொள்ளும். உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகள் முன்கூட்டியே ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாட ஆரம்பிக்கும்.

இப்படி நாட்கள் நெருங்க நெருங்க ரசிகர்களுக்கு ஏற்படும் கிரிக்கெட் காய்ச்சல், பல அணிகளின் முன்னாள் வீரர்களுக்கும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விடும். அதற்கு மேல் கிரிக்கெட் களம் பரபரப்பாக சூடு பிடிக்கத் தொடங்கும்.

- Advertisement -

இந்தியாவில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்க இருப்பதால், கிரிக்கெட் காலம் மிகவும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. ரசிகர்கள் தாண்டி பல முன்னாள் வீரர்களும் மிக எதிர்பார்ப்போடு தங்களது உலகக்கோப்பை கணிப்புகளை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், உலகக் கோப்பையில் எந்த ஐந்து அணிகளுக்கு இடையே கோப்பையை கைப்பற்றுவதற்கான போட்டி அதிகபட்சம் இருக்கிறது? என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது
“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை அபாரமாக விளையாடி வென்ற காரணத்தினால், தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணியும் நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போட்டியாளராக மாறியிருக்கிறது. ஹென்றி கிளாசன் அந்த அணியின் சொத்தாக இருக்கிறார்.

இந்திய மண்ணில் உலகக் கோப்பை நடப்பதால் இந்தியா பெரிய வாய்ப்பில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி எப்பொழுதும் குறைத்து மதிப்பிட முடியாத அணி. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இருக்கிறது. ஆஸ்திரேலியாவை பொருத்தவரை அவர்கள் எப்பொழுதும் அந்த இடத்தில் இருப்பார்கள்!” என்று கூறி இருக்கிறார்!