“ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விராட் கோலி படைக்க இருக்கும் சாதனைகள்”- ஒரு பார்வை!

0
1440

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இரண்டா அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நாளை முதல் தொடங்க இருக்கிறது .

முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை நகரின் வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது . இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தனது மைத்துனரின் திருமணம் காரணமாக விலகி இருப்பதால் அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருக்கிறார் . ஒரு நாள் போட்டிகளில் சமீபமாக நல்ல ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் விலகி இருப்பது இந்தியா அணிக்கு சிறிய பின்னடைவாக அமையலாம். மேலும் இது சூரியகுமார் யாதவ் ஒரு நாள் போட்டிகளில் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் அமையலாம்.

இந்திய அணியை பொறுத்தவரை சுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் தனது பார்மை இழந்து தவித்து வந்த விராட் கோலி பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார் .

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் அபாரமாக ஆடி இரண்டு சதங்களை எடுத்தார். இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் விராட் கோலி என்னென்ன சாதனைகளை நிகழ்த்தலாம் என பார்ப்போம் .

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகளை வென்ற இரண்டாவது வீரர்:
ஆஸ்திரேலியா அனுப்பியதாக அகமதாபாத் பேஸ்டில் விராட் கோலி 186 ரன்களை எடுத்தார் . இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டநாயகன் விருதின் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 9 ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருக்கிறார் விராட் கோலி. நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் அவர் ஆட்டநாயகன் விருதை வெல்வதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ஆட்ட நாயகன் விருதுகளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கலாம். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக ஆட்டநாயக்க விருதுகளை வென்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 17 ஆட்டநாயகன் விருதுகளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வேண்டி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர்:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 75 ஆவது சதத்தை பதிவு செய்தார் . இந்த 75% ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 16 சர்வதேச சதங்களை பதிவு செய்திருக்கிறார் விராட் கோலி. அவற்றில் எட்டு சதங்கள் ஒரு நாள் போட்டிகளில் எடுக்கப்பட்டவை. நடைபெற இருக்கும் ஒரு நாள் போட்டி தொடரில் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சதம் அடிப்பதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைக்கலாம். தற்போது சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் 9 சதங்களை பதிவு செய்திருக்கிறார். விராட் கோலி 8 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் :
தற்போது விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் 262 இன்னிங்ஸ்களில் 12,809 ரன்கள் எடுத்திருக்கிறார். இந்தத் தொடரில் அவர் 191 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டிகளில் 13 ஆயிரம் ரகளைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் சர்வதேச கிரிக்கெட்டில் 13,000 ரன்களை எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் படைக்கலாம். மேலும் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரண்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை 321 இன்னிங்ஸ் களில் எட்டி இருக்கிறார் . விராட் கோலி இந்த தொடரில் 13,000 நன்களை கடப்பதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது.