நாளை துவங்க இருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பல சாதனைகளை உடைக்க இருக்கிறார்கள்.
இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் துவங்குகிறது.
விராட் கோலி சாதனைகள்
நியூசிலாந்து அணிக்கு அதிக ரன்கள் எடுத்தவராக சச்சின் டெண்டுல்கர் 1750 ரன்கள் எடுத்திருக்கிறார். விராட் கோலி 1657 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் 94 ரன்கள் எடுத்தால் விராட் கோலி இந்த சாதனையை முறியடிப்பார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 664 இன்னிங்ஸ்களில் 28,000 ரன்கள் எடுத்திருக்கிறார். விராட் கோலி இன்னும் 25 ரன்கள் எடுத்தால், சர்வதேச கிரிக்கெட்டில் அதிவிரைவாக 28 ஆயிரம் ரன்கள் எடுத்த வீரராக சாதனை படைப்பார்.
மேலும் விராட் கோலி இன்னும் 24 ரன்கள் எடுத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சங்கராவை தாண்டி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடிப்பார். நியூசிலாந்து தொடரில் இந்த மூன்று சாதனைகளையும் விராட் கோலி உறுதியாக படைப்பார் என்று நம்பலாம்.
ரோஹித் சர்மா சாதனைகள்
இந்த நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா இன்னும் 64 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ஜாக் காலிசை தாண்டி எட்டாவது இடத்தை பிடிப்பார். அதே சமயத்தில் 484 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் கிரிக்கெட்டில் 12000 ரன்கள் தொடுவார்.
இதையும் படிங்க: ரோகித்தை தொடர்ந்து குறி வைக்கும் கம்பீர் அகர்கர்.. ரிஷப் பண்ட்டே சாட்சி.. என்ன நடக்கிறது? – முழுமையான அலசல்
இந்திய அணியின் 2 நட்சத்திர வீரர்களுக்கும் முக்கியமான சாதனைகள் நியூசிலாந்து தொடரில் காத்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. எனவே நாளை தொடங்கும் முதல் போட்டியில் இருவரும் அரை சதத்தை தாண்டி விட்டால் பல சாதனைகள் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






