“எட்டாவது ஓவர்லேயே சதமடித்து புதிய சாதனை”…… தென்னாப்பிரிக்க வீரரின் சாதனையை 24 மணி நேரத்தில் முறியடித்த பாகிஸ்தான் வீரர் !

0
7808

தற்போது பாகிஸ்தான் நாட்டில் பி.எஸ்.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் உலகின் பிற நாடுகளில் உள்ள சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இந்த தொடரில் ஆடி வருகின்றனர். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களை போலவே பாகிஸ்தானில் பி எஸ் எல் கிரிக்கெட் தொடர்கள் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான பி.எஸ்.எல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

ஆறு அணிகளைக் கொண்டு நடத்தப்படும் இந்த போட்டி தொடரில் தற்போது லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் முல்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மீதியிருக்கும் ஒரு இடத்திற்காக பெஷாவர் மற்றும் குவெட்டா அணிகள் போட்டியிட்டு வருகின்றன.

- Advertisement -

கடந்த ஒரு வாரமாகவே பி.எஸ்.எல் போட்டி தொடர்களில் ரன் மழை பொழிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் அணியை சர்பராஸ் கான் தலைமையிலான குவெட்டா அணி 240 ரன்கள் சேஸ் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் அபாரமாக ஆடி 145 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் நேற்று பெஷாவர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர் ரிலே ரூசோ 41 பந்துகளில் சதம் எடுத்து பி.எஸ்.எல் கிரிக்கெட் தொடரில் அதிவேக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அவரது சாதனை 24 மணி நேரத்திற்குள்ளாக அவரது அணி வீரராலேயே முறியடிக்கப்பட்டு இருக்கிறது. இன்று நடைபெற்ற போட்டியில் முல்தான் அணி மற்றும் குவெட்டா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய முல்தான் அணியின் வீரர் உஸ்மான் கான் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் சதம் அடித்து தனது சக அணி வீரரான ரிலே ரூசோவின் சாதனையை முறியடித்திருக்கிறார். டாசில் வெற்றி பெற்ற குவெட்டா அணி முல்தான் அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணிந்தது.

தொடக்கத்திலிருந்தே அதிரடியாக ஆடிய உஸ்மான் கான் பௌண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்க விட்டார். இவரது அதிரடியினால் குவெட்டா பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். அதிரடியின் மூலம் வான வேடிக்கை நிகழ்த்திய உஸ்மான் கான் 36 பந்துகளில் 100 ரண்களை அடித்து பி.எஸ்.எல் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். இவரது ஆட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பத்தாவது ஓவரிலேயே இவர் ஆட்டம் இழந்து விட்டார். அவரது தனிப்பட்ட ஸ்கோர் 120. 43 பந்துகளில் 120 ரன்கள் குவித்த உஸ்மான் கான் 9 சிக்ஸர்களையும் 12 பவுண்டரிகளையும், விலாசினார்.

- Advertisement -

இவரது அதிரடியான துவக்கத்தின் மூலம் முல்தான் அணி மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. இறுதியாக அதிரடியில் களம் இறங்கிய பொல்லார்ட் மற்றும் டீம் டேவிட் ஆகியோர் முல்தான் அணி 262 ரன்களை எட்ட உதவினர். ஆட்டத்தின் இறுதியில் முல்தான் அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ரன்களை எடுத்துள்ளது. டேவிட் 43 ரன்கள்டனும் பொல்லார்ட் 23 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.