12 ஆண்டுகள் கழித்து ரஞ்சியில் விராட் கோலி.. டிவியில் ஒளிபரப்பப்படாதது ஏன்?.. வெளியான காரணங்கள்

0
332
Virat

விராட் கோலி 12 ஆண்டுகள் கழித்து ரஞ்சி டிராபி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாட திரும்பி வருகிறார். இந்திய நட்சத்திர வீரர் விளையாடிய போதிலும் இந்த போட்டியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படாததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளை விதைத்திருந்தது. அதன்படி காயம் இல்லாமல் இருந்தாலோ அல்லது இந்திய தேசிய அணிக்கு விளையாடாமல் இருந்தாலோ அனைவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று கூறி இருந்தது. இந்த வகையில் விராட் கோலி உள்நாட்டு கிரிக்கெட்டில் களம் இறங்க இருக்கிறார்.

- Advertisement -

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகை

விராட் கோலி 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் விளையாடுகிறார். இந்த முறை அவர் ரயில்வே அணிக்கு எதிராக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில் டெல்லி அணிக்காக முதலில் விளையாடிய ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடவில்லை.

மேலும் விராட் கோலி தன்னுடைய 24 ஆவது வயதில் ஷேவாக் தலைமையில் கடைசியாக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடியிருந்தார். இந்த போட்டியை விளையாடி முடித்துக் கொண்டு அவர் நேரடியாக இங்கிலாந்து ஒருநாள் தொடர் இந்திய பயிற்சி முகாமுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நேரடி ஒளிபரப்பு இல்லாதது ஏன்?

ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட போட்டிகளுக்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் கழுத்து வலியின் காரணமாக இரண்டாம் கட்ட போட்டிகளின் ஆரம்பத்தில் விராட் கோலி டெல்லி அணிக்கு களம் இறங்கவில்லை. இதேபோல தற்போது ரயில்வே அணிக்கு எதிராகவும் திடீரெனவே விளையாட வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஃபேன்ஸ் அதிகமா இருந்தா டீம்ல எடுப்பீங்களா?.. மறுபடியும் அவமானகரமான தோல்வி – அகமத் சேஷாத் விமர்சனம்

இதன் காரணமாகவே தற்போது விராட் கோலி விளையாடிய போதும் டெல்லி மற்றும் ரயில்வே அணிகளுக்கு இடையே ஆன போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. மேலும் ஆன்லைனிலும் நேரடி ஸ்ட்ரீமிங் செய்ய முடியவில்லை. இந்த முறை டெல்லி அணி விளையாடிய ரஞ்சி போட்டிகளில் தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடிய போட்டி மட்டுமே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தற்போது இது குறித்தான இந்த காரணம் வெளியிடப்பட்டிருக்கிறது!

- Advertisement -