பாகிஸ்தான்ல அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 140 ரன்கள் வித்தியாசத்தில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது சேஷாத் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த வாரத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. இதில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்து முதல் போட்டியை பாகிஸ்தான் வென்று, மீண்டும் அப்படியான ஆடுகளத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
பாகிஸ்தான் அணிக்கு நடந்த சோகம்
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதின் மூலமாக, 34 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் வெற்றியை பெற்றது. இது தற்பொழுது வளர்ந்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் தேவையான வெற்றியாக அமைந்திருக்கிறது.
அதே சமயத்தில் இந்த தோல்வியின் காரணமாக நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பாக இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் போதும் ஐந்தாவது மற்றும் ஏழாவது இடத்தை பாகிஸ்தான் பிடித்திருந்தது. முதல் முறையாக கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு சோகம் நடைபெற்று இருக்கிறது.
மூன்று தலைவரும் பொறுப்பெடுக்கவில்லை
இதுகுறித்து அகமத் சேஷாத் கூறும் பொழுது “பாகிஸ்தான் கிரிக்கெட் புதிய வீழ்ச்சியை எட்டி உள்ளது. இந்த தோல்வி அனுப்பும் கவனம் மற்றும் பொறுப்பு இல்லாததை மிகத் தெளிவாக காட்டுகிறது. பொறுப்பற்ற ஷாட் விளையாடுவோ அல்லது ஸ்லிப்பில் எட்ஜ் செய்யவோ இந்த ஆடுகளம் சொல்லவில்லை. இது ஆடுகளத்தின் தன்மை பற்றியது கிடையாது, வீரர்களின் மனநிலை பற்றியது”
இதையும் படிங்க : இந்திய தொடர்ல தேவை இல்லாம பேசக்கூடாது.. அந்த கலையை கத்துக்கணும் – புரூக் பேச்சுக்கு பீட்டர்சன் அறிவுரை
“செயல்திறன் மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் அமைப்பு எங்களுக்கு தேவையாக இருக்கிறது. யார் பிரபலமாக இருக்கிறார்களோ, யாரை சமூக வலைத்தளத்தில் அதிகமாக பின் தொடர்கிறார்களோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. அணியில் மூன்று தலைவர்கள் இருந்தார்கள். யாருமே பொறுப்பு எடுத்துக் கொள்ளவில்லை. தலைமை பண்பு என்பது கடினமான நேரத்தில் பொறுப்பு எடுப்பதை பற்றியது. நாங்கள் இன்னும் மோசமாக செல்லும் அபாயம் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






