ரவிச்சந்திரன் அஷ்வின் ஏன் முதல் டெஸ்டில் விளையாடவில்லை என்பதற்கான காரணம்

0
2130
Ashwin Team India

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக கூறியது. இதற்கு முன் 2018ல் நடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோஹ்லி டாசில் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் 11 வீரர்களை அறிவித்தார். அதில் நட்சத்திர ஸ்பின்னர் அஸ்வினின் பெயர் இடம்பெறவில்லை. அச்செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே இங்கிலாந்து ஆடுகளத்தில், ஜூன் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்றார். முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

- Advertisement -
Ashwin Test
Photo: BCCI

ரவி அஸ்வின், பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு பல முறை உதவியுள்ளார். சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தடுக்கவும் அவர் உதவினார். சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில் இதே இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசினார். அப்படி இருக்கும்போது அவரை ஏன் முதல் டெஸ்ட்டில் எடுக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

பிளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாததற்கு காரணங்கள்

அஸ்வின் விளையாடாதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். முதலில், ஆடுகளத்தின் தன்மை. இங்கிலாந்து மைதானம், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்று. அதனால் ஒரே ஒரு ஸ்பின்னர் போதும் என்ற மனநிலைக்கு கோஹ்லி மற்றும் இந்திய அணி நிர்வாகம் வந்திருக்கலாம்.

இங்கிலாந்து அணியில் ஆறு வலது கை பேட்ஸ்மேன்கள் ஆடுகின்றனர். அவர்களை சமாளிக்க இடது கை ஸ்பின்னரான ஜடேஜா அவசியம் என்று கருதி அஸ்வினை ஒதுக்கி இருப்பார்.

- Advertisement -

அஸ்வினைக் காட்டிலும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் நன்றாக ஆடுவார். ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில், ஜடேஜா அற்புதமாக பேட்டிங் செய்து அரை சதம் விளாசினார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க பேட்டிங்கில் கூடுதல் பலம் நிச்சயம் தேவை. அதை கருத்தில் கொண்டு, கோஹ்லி மற்றும் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவிற்கு வந்து இருக்கலாம். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கண்டிப்பாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கோஹ்லி உள்ளார். அஸ்வின் சிறந்த பார்ம்-இல் இருப்பதால் அடுத்த டெஸ்ட் மேட்சில் விளையாடுவார் என எதிர்பாக்கலாம்.