நடராஜன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இடம்பெறாதற்கு இதுதான் காரணம்

0
346
Natarajan and Shreyas Iyer

தற்பொழுது இந்திய அணியின் அனைத்து சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் இருக்கின்றனர். வருகிற வெள்ளிக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாடி முடித்த பின்னர், ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி இருக்கின்றனர்.

அதன் காரணமாக சீனியர் வீரர்கள் தவிர்த்து நிறைய இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ இலங்கைக்கு எதிராக விளையாட தேர்ந்தெடுத்துள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக ஒரு அணியை தேர்ந்தெடுத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல்

பிரித்வி ஷா, ஷிகர் தவான், படிக்கல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, ருத்ராஜ், ஹர்திக் பாண்டியா, குருநல் பாண்டியா, ராகுல் தெவாட்டியா, விஜய்சங்கர், புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், நவ்தீப் சைனி, ஹர்ஷல் பட்டேல், கார்த்திக் தியாகி, கலீல் அஹமது, சர்க்காரியா, வருன் சக்கரவர்த்தி, சஹால், குல்தீப் யாதவ் மற்றும் ராகுல் சஹர்.

இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் நடராஜன் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை, அவர்களது பெயரை ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்த காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

இருவரும் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றனர்

ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது இடது தோள்பட்டை காயம் காரணமாக வெளியேறினார். இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் மருத்துவ குழு கூறியது. அதன் காரணமாக அவரால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

Shreyas Iyer Team India

தற்போது அவர் அறுவை சிகிச்சையை நல்லபடியாக முடித்து தன்னுடைய உடற்பகுதியை மேம்படுத்தி வருகிறார். மீண்டும் அணியில் இடம்பெற்ற விளையாட அவருக்கு சில நாட்கள் ஓய்வு தேவை என்பதால் அவர்கள் தற்போது இந்திய அணிக்கு உடனடியாக விளையாட விட முடியாது.

அதேபோல மறுபக்கம் நடராஜன் தனது முழங்கால் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அவரும் அறுவை சிகிச்சையை நல்லபடியாக முடித்து தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டு வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் போலவே இவரும் தன்னுடைய உடல் தகுதியை மேம்படுத்தி வருவதால், இந்திய அணியில் மீண்டும் விளையாட சில நாட்கள் ஓய்வு தேவை.

T Natarajan

இதன் காரணமாகத்தான் இவர்கள் இருவரின் பெயரும் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. இவர்கள் மீண்டும் நல்ல உடல் தகுதியுடன் அணியில் வந்து விளையாடும் அளவுக்கு மீண்டு வரும் வேளையில், இந்திய அணியில் இடம் பெற்று பழையபடி விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.