இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்? என்ன காரணம்?

0
66

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் எடுத்தது. இதனையும் அடுத்து ஆறு ரன்கள் முன்னிலை பெற்று இருந்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தங்களுடைய கடைசி இன்னிங்ஸில் களம்பிறங்கியது. விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் என்ற ஸ்கோருடன் கடைசி நாளில் இங்கிலாந்து அணி விளையாடியது. இதில் மேலும் 350 ரன்கள் சேர்த்தால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும். இந்திய அணியின் வெற்றிக்கு 10 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

- Advertisement -

திலீப் தோஷி காலமானார்

இந்த சூழலில் இன்று ஆட்டம் தொடங்கியது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்து விளையாடினார்கள். மேலும் முதல் பந்து வீசுவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தினர். இதற்கு என்ன காரணம் என்று தற்போது பார்க்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருந்த திலீப் தோஷி, லண்டனில் காலமானார். 77 வயதான திலீப் தோஷிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்திய அணிக்காக 33 டெஸ்ட் போட்டிகள் 15 ஒருநாள் போட்டிகளில் திலீப் தோஷி விளையாடி இருக்கின்றார்.

- Advertisement -

இரு அணி வீரர்களும் இரங்கல்:

டெஸ்ட் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும் ஒரு நாள் கிரிக்கெட்டில் 22 விக்கெட்டுகளையும் விளையாடி உள்ள திலீப் தோஷி, இந்திய அணிக்காக 1979 ஆம் ஆண்டிலிருந்து 83 ஆம் ஆண்டு வரை விளையாடினார். தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திலீப் தோஷி விளையாடினார்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் சாதனை படைக்க காரணமே ஸ்டோக்ஸ்தான்.. இப்படி அவர் செஞ்சு பார்த்ததே இல்ல – நாசர் ஹுசைன் விமர்சனம்

தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். ரஞ்சி கிரிக்கெட் கோப்பையில் சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிக்காக விளையாடிய திலீப் ஜோஷி கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். மொத்தமாக முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 898 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். திலீப் தோஷிக்கு இரங்கல் தெரிவிக்க விதமாகத்தான் இந்திய அணி வீரர்கள் மௌன அஞ்சலி மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர்.

- Advertisement -