ரிஷப் பண்ட் சாதனை படைக்க காரணமே ஸ்டோக்ஸ்தான்.. இப்படி அவர் செஞ்சு பார்த்ததே இல்ல – நாசர் ஹுசைன் விமர்சனம்

0
223
Stokes

இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டாப்ஸ் வகுத்த வியூகங்கள் மிகவும் சுமாராக இருந்ததாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் விமர்சனம் செய்திருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆன்டி பிளவருக்கு பிறகு இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

எனக்கு பிடிக்காதது இதுதான்

இது குறித்து நாசர் ஹுசைன் கூறும்பொழுது ” நேற்று நடந்ததில் எனக்கு பிடிக்காத விஷயம் என்னவென்றால், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய உள்ளே வந்த ஆரம்ப நேரத்தில், தற்காப்பு பீல்டிங் அமைத்து அவரை சுலபமாக சிங்கிள் எடுக்க வைத்து எதிர்முனைக்கு அனுப்பி வைத்ததுதான். பண்ணிட்டு பேட்டிங் செய்யும் விதத்தைப் பற்றி பேசவே முடியாது ஏனென்றால் அவர் ஒரு விசித்திரமான வீரர். ஆனால் நீங்கள் அவரை ஸ்ட்ரைக்கில் வைத்திருந்தால் தான் விக்கெட் எடுக்க முடியும்”

“ஏனென்றால் நீங்கள் அவர் விக்கெட்டை எடுக்க வேண்டும் என்றால் அவர் விளையாடினால் மட்டுமே முடியும். அப்பொழுது தாக்குதலாக ஃபீல்டிங் செட்டப் வைத்து நான்கைந்து டாட்-பால்கள் தொடர்ந்து வீச வேண்டும். அவரை நீங்கள் இப்படி விரக்தி அடைய வைப்பதின் மூலமாகத்தான் ஏதாவது தவறு செய்ய வைக்க முடியும்”

- Advertisement -

ரிஷப் பண்ட் ஸ்டோக்சை தவறு செய்ய வைத்தார்

“ஒரு முனையில் கே எல் ராகுல் நாள் முழுவதும் ஒரே வேகத்தில் பேட்டிங் செய்து சீராக சென்று கொண்டு இருந்தார். ஆனால் ஸ்டோக்ஸ் உடைய வியூகங்களுக்கு காரணமாக இருந்தது ரிஷப் பண்ட். அவர்தான் தற்காப்பான பீல்டிங் முறையை அமைப்பதற்கான காரணமாக இருந்தார். ரிஷப் பண்ட் வெளியில் தூக்கி அடித்த சிக்குவார் என ஸ்டோக்ஸ் தனது ஸ்லிப் பீல்டர்களை தூக்கி வெளியில் வைத்தார்”

இதையும் படிங்க: கேஎல் ராகுல் தமிழக வீரரின் மந்திரத்தை படிச்சிட்டார்.. அவருடைய வெற்றிக்கு காரணம் இதுதான் – ஹேமங் பதானி கருத்து

“இப்படி தற்காப்பாக ஸ்டோக்ஸ் சென்று நான் பார்த்த வெகு சில நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. அவர் எப்பொழுதும் தாக்குதல் பாணியில் எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். மேலும் இந்தியாவில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் பீல்டிங் அமைப்பது போல இன் அவுட் பீல்டிங் முறையை வைத்திருந்தால், அவருக்கு உள்ளே வெளியே என எல்லா பக்கத்திலும் பீல்டர்கள் இருந்திருப்பார்கள். ஆனால் இதை ஸ்டோக்ஸ் தவற விட்டுவிட்டார்” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -