கேன் வில்லியசனை வெளியேற்ற இது தான் காரணம் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியிட்ட தகவல்!

0
826

கேன் வில்லியம்சனை அணியில் இருந்து நீக்குவதற்கு இதுதான் காரணம் என்று தெரிவித்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு முன்பு நவம்பர் 15ஆம் தேதிக்குள் அணியில் இருந்து யார் யாரை தக்க வைக்கிறோம்? யார் யாரை நீக்குகிறோம்? என்ற பட்டியலை தயார் செய்து ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கான காலஅவகாசம் முடிவடைந்து 10 அணிகளும் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 வீரர்களை வெளியேற்றி முழுவதுமாக மாற்றம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

குறிப்பாக 2015 ஆம் ஆண்டு முதல் சன்ரைசர்ஸ் அணியுடன் பயணித்து வந்த கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டிருக்கிறார். இது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியது. இதற்கிடையில் யார் அடுத்த கேப்டனாக வருவார்? எதற்காக வில்லியம்சன் நீக்கப்பட்டார்? என்கிற பல கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

- Advertisement -

இந்த பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக கேன் வில்லியம்சனை நீக்கப்போகிறோம் என்ற தகவலை மறைமுகமாக வெளியே கூறினார் அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி. அவர் கூறுகையில்,

“வில்லியம்சன் மிகச் சிறந்த மனிதர். திறமையான விளையாட்டு வீரர். ஆனால் 14 கோடி என்பது அவருக்கு மட்டும் அல்ல எந்த ஒரு வீரருக்கும் அதிகம் தான்.” என்றார்.

மேலும், “கடந்த நான்கு மாதங்களாக வில்லியம்சன் சர்வதேச போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. அவ்வபோது காயமடைந்து வருகிறார். கடந்த ஓராண்டாக கையில் மூட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயம் அவரை தீவிரமாக பாதித்திருக்கிறது.” என்றும் குறிப்பிட்டார்.

கேன் வில்லியம்சன் எளிதில் காயம் அடைந்து விடுகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் கூட சில போட்டிகள் வெளியில் அமர்ந்திருந்தார், புவனேஸ்வர் குமார் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடினார். தொடர் முழுவதும் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்று சந்தேகங்கள் நிலவி வருகிறது. இதன் காரணமாக அவரை வெளியேற்றிவிட்டு புதிய கேப்டனை நோக்கி நகர்வதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தயாராகி வருகிறது என தகவல்கள் வருகின்றன

ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டொக்ஸ் எடுப்பதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முனைப்பு காட்டி வருவதாகவும், அதற்காக எவ்வளவு கோடி செலவானாலும் பரவாயில்லை என்ற வகையில் திட்டமிட்டு வருவதாகவும் அணியின் தரப்பிலிருந்து தெரிய வந்திருக்கிறது. இது நடக்குமா? இல்லையா? என்பதை ஐபிஎல் ஏலம் வரை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.