“என்னுடைய கிரிக்கெட்டை ரொம்ப மிஸ் பண்றேன்” – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக ரிஷப் பண்ட் உருக்கம்!

0
566

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தயாராகி வருகின்றன . இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரிஷப் பண்ட் கேஎல் ராகுல் மற்றும் பும்ரா ஆகியோர் தாயும் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இந்த விஷயம் இந்திய அணிக்கு சாதகமாக அமையுமா என்பது போட்டியின் போது தான் தெரியவரும் . ஆனால் இந்திய அணியின் முன்னணி வீரர்களின் காயம் நிச்சயமாக இந்த போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

- Advertisement -

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கார் விபத்தின் போது ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு இன்னும் ஒரு வருடங்களுக்கு மேலாகும் என்று மருத்துவர்களும் கிரிக்கெட் வல்லுனர்களும் தகவல் தெரிவித்துள்ளனர் . காயம் மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார் ரிஷப் பண்ட் .

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது கூட டெல்லி அணியின் சில போட்டிகளை பார்க்க வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின் சில காலமாக ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்த அவர் கடந்த சில வாரங்களாக ஊன்றுகோல் உதவி இல்லாமல் நடைப்பயி என்று வந்த காணொளிகளையும் நாம் காண முடிந்தது . இதன் மூலம் விடாமுயற்சியினால் மீண்டும் தனது கிரிக்கெட்டை துவக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது .

அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் தன்னுடைய உடல் நலன் குறித்தும் பயிற்சிகள் குறித்தும் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பண்ட் . உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி துவங்குவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் தன்னுடைய கிரிக்கெட்டை மிகவும் மிஸ் செய்வதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரிஷப் பண்ட் .

- Advertisement -

ஒரு நாள் மட்டும் t20 போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரராக விளங்கியவர் ரிஷப் பண்ட். அவர் இறுதியாக விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட சதத்தை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது . மிடில் ஆர்டரில் களம் இறங்கி அடித்து விளையாடும் பண்டின் ஆட்டம் பல டெஸ்ட் போட்டிகளை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றி இருக்கிறது என்றால் மிகை ஆகாது .

2020-21 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது . அந்தத் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்தவர் ரிஷப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது . இவரது அபாரமான அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது நமக்கு நினைவிருக்கும் .

இந்திய அணிக்காக இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் ரிஷப் பண்ட் 2271 ரகளை எடுத்திருக்கிறார் . இதில் 11 அரை சதங்களும் 5 சதங்களும் அடங்கும் . இவரது அதிகபட்ச ஸ்கோர் 159 ஆகும் . லிஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 43.67