நானே நின்னு பினிஷ் பண்ணீருந்தா, இன்னும் சந்தோஷமா இருந்திருப்பேன் சார் – சூரியகுமார் யாதவ்!

0
1112

இஷான் கிஷான் உடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு உதவியது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று பேசியுள்ளார் சூரியகுமார் யாதவ்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. லிவிங்ஸ்டன் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 82 ரன்கள் மற்றும் ஜித்தேஷ் சர்மா கிட்டத்தட்ட 190 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 49 ரன்கள் அடிக்க, பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெடுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

- Advertisement -

கடந்த போட்டியில் 213 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இம்முறை 215 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய களமிறங்கியபோது ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

இஷான் கிஷன் கிட்டத்தட்ட 183 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி, 41 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் கிட்டத்தட்ட 215 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 31 பந்துகளில் 66 ரன்கள் விலாசினார். மூன்றாவது விக்கெட்டிற்கு இஷான்-சூர்யகுமார் ஜோடி 116 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர்.

கடைசியில் வந்து டிம் டேவிட் மற்றும் திலக் வர்மா இருவரும் போட்டியை பினிஷ் செய்து கொடுத்தனர். 18.5 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 216 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

- Advertisement -

31 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் 8 பவுண்டரிகள் உட்பட 66 ரன்கள் குவித்து 215 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய சூரியகுமார் யாதவ் போட்டி முடிந்த பிறகு பேட்டி அளிக்கையில், “வெற்றி பெற்ற அணியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் நான் உள்ளே இருந்து ஆட்டத்தை ஃபினிஷ் செய்து கொடுத்திருக்க வேண்டும் என்று உணர்கிறேன்.

கேமரூன் கிரீன் அவுட் ஆன பிறகு, நான் உள்ளே சென்றபோது நல்ல மனநிலையுடன் விளையாட வேண்டும்; இஷான் கிஷன் நன்றாக விளையாடு வருகிறார். அவருக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் விளையாடிய அனுபவம் மற்றும் பயிற்சி எனக்கு இருக்கிறது. ஆகையால் என்னுடைய திட்டம் மற்றும் அணுகுமுறை மிகவும் எளிமையானது. என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவிக்கவேண்டும் என்பதே திட்டம். அதேநேரம் இஷான் கிஷன் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி வருகிறார். அவருக்கு கூடுதல் சப்போர்ட் கொடுத்து அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டுக்கு இணையாக அடித்தால் மட்டுமே இத்தகைய ஸ்கோரை எட்ட முடியும் என்றும் நினைத்தேன். அது ஒர்க் அவுட் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது.

என்னிடம் பவரான கேம் இல்லை. ஆகையால் பந்தை சரியாக டைமிங் செய்து அடிக்க வேண்டும் மற்றும் ஃபீல்டிங் எப்படி இருக்கிறது என்பதற்கு ஏற்றவாறு அடிக்க வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுவேன். இஷான் கிஷன் உடன் பாட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்காக உதவியது மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.” என்றார்.