அடித்து தூக்கிய ஆர்சிபி.. 40.75 கோடி.. முக்கிய வீரர்கள் கூண்டோடு வெளியேற்றம்.. என்ன திட்டம்?

0
2104
RCB

அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு மினி ஏலத்தை இந்த வருடம் நடத்துவதற்காக, வீரர்களை தக்க வைக்கவும் பரிமாறிக் கொள்ளவும் இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இன்று மாலை 4 மணியிலிருந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களுடைய இறுதி அணியை வெளியிட்ட முடித்திருக்கின்றன.

- Advertisement -

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை. அதேபோல ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடர்ந்து நீடிக்கிறார். மும்பை அணி அதிரடியாக வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை நீக்கி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் அதிகமானவர்களால் கவனிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் போன்ற மூன்று அணிகளும் தங்களுடைய இறுதி அணியை அறிவித்தன.

இந்த நிலையில் கோப்பையை வெல்லவிட்டாலும் கூட பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எந்த வீரர்களை வெளியேற்றும் என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிரடியாக 11 வீரர்களை வெளியேற்றி இருக்கிறது. மேலும் இதன் மூலமாக 40.75 கோடி ரூபாய் கையிருப்பையும் வைத்துக் கொண்டுள்ளது. இதனால் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கின்ற ஐபிஎல் மினி ஏலத்தில் பெங்களூர் அணியின் கை ஓங்கி இருக்கும்.

கடந்த மெகா ஏலத்தில் தலா 10.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட இந்திய வீரர் ஹர்சல் படேல் மற்றும் இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ஹசரங்கா, மற்றும் 7 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில்வுட் அதிரடியாக பெங்களூரு கழட்டிவிட்டு இருக்கிறது.

இதுமட்டும் இல்லாமல் நியூசிலாந்தின் ஆலன் மற்றும் பிரேஸ்வெல், இங்கிலாந்தின் டேவிட் வில்லி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் பர்னல் ஆகியோரையும் கழட்டிவிட்டு இருக்கிறது. இப்படி மொத்தமாக ஆறு வெளிநாட்டு வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

இந்த 7 வீரர்களோடு சேர்த்து இந்திய உள்நாட்டு இளம் வீரர்களான சோனு யாதவ், அவினாஷ் சிங் ஆகியோரையும், மூத்த இந்திய வீரர்களான கேதார் ஜாதவ் மற்றும் சித்தார்த் கவுல் இருவரையும் என மொத்தம் 11 பேரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெளியேற்றி, மொத்தம் 40.75 கோடி கையிருப்பு பணத்தை வைத்திருக்கிறது.