ஐபிஎல் முதல் மேட்ச்.. ஆர்சிபி கேகேஆர் உத்தேச பிளேயிங் XI.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? – முழு அலசல்

0
193
Virat

நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 18வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டிக்கு இரண்டு அணிகளின் பிளேயிங் லெவன்? எவ்வாறு அமையலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்த இரு அணிகளில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக இளம் வீரர் ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டிருக்கிறார். கேகேஆர் அணிக்கு கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கழட்டி விடப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த அணிக்கு அனுபவ இந்திய வீரர் ரகானே வாங்கப்பட்டு கேப்டனாக ஆக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி பிளேயிங் லெவன்

இந்த முறை ஆர்சிபி அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாக இருக்கிறது. மேலும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டும் வலிமையாக இருக்கிறது. ஆனால் அவர்களிடம் நல்ல தரமான தாக்கத்தை தரக்கூடிய சுழல் பந்துவீச்சாளர்கள் இல்லை என்பது குறையாக இருக்கிறது.

விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா (வி. கீ), டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ராசிக் சலாம், புவனேஸ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக யாஸ் தயால். இதில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். மேலும் 6 அடிக்கக்கூடிய வகையில் புவனேஸ்வர் குமார் வரையில் 10வது இடத்திலும் பேட்ஸ்மேன் இருப்பார்கள்.

- Advertisement -

கேகேஆர் பிளேயிங் லெவன்

இந்த முறை கோப்பையை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க இடத்தில் தாக்கத்தை செலுத்திய பில் சால்ட் மற்றும் நாக் அவுட் போட்டிகளில் கடந்த முறை தாக்கத்தை உண்டாக்கிய மிட்சல் ஸ்டார்க் இருவரும் இல்லை என்பது மட்டுமே குறை. மற்றபடி இந்த அணி மீண்டும் வலிமையானதாகவே காணப்படுகிறது.

குயின்டன் டி காக் (வி. கீ), சுனில் நரைன், ரகானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராண, அன்ட்ரிச் நோர்க்கியா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் இம்பாக்ட் பிளேயர் ரகுவன்சி. இதில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள், இரண்டு பகுதி நேர பந்துவீச்சாளர்கள், மேலும் பேட்டிங் வரிசையில் ஹர்ஷித் ராணா வரும் ஒன்பதாவது இடம் வரையில் பேட்டிங் நீளம் இருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2025..லீக் சுற்று போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு அணிகளும் எவ்வளவு கிமீ பயணம் செய்ய வேண்டும் தெரியுமா? ஆர்சிபி, சிஎஸ்கேக்கு தான் ரொம்ப கடினம்

இந்த போட்டியில் சொந்த மைதானத்தில் விளையாடுவது, வலிமையான பேட்டிங் யூனிட், வலிமையான வேகம் மற்றும் சுழல் யூனிட் என நிறைய சாதகங்கள் கேகேஆர் அணிக்கு ஆர்சிபி அணியை விட அதிகம் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கேகேஆர் அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள்.

- Advertisement -