சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மட்டும் ஒரே இடத்தில் துபாயில் விளையாடியதற்கு பலரும் பல எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக நியூசிலாந்து அணி 7000 கிலோமீட்டர் பயணம் செய்தது என்றும் தென்னாப்பிரிக்க அணியும் துபாய்க்கும் லாகூருக்கும் மாற்றி மாற்றி பயணம் செய்தது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பயணம் செய்வது என்பது கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. 14 லீக் போட்டிகள் சொந்த மைதானத்தில் 7 போட்டிகள் வெளி மைதானத்தில் 7 போட்டிகள் என நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஐபிஎல் அணிகள் சென்று விளையாட வேண்டும். இதில் சில அணிகளுக்கு ஒரு நாள் மட்டும்தான் இடைவெளி இருக்கும்.
ஆர்சிபி vs சிஎஸ்கே தூரம்
அதையும் தாண்டி தான் வீரர்கள் விமான பயணம் செய்து போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இது நிச்சயம் வீரர்களின் மனதையும் உடலையும் சோர்வாக்கி விடும். எனினும் அதற்கு தயாராகி தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றனர்.
இந்த சூழலில் லீக் சுற்று முடிவில் நடப்பு சீசனில் ஒவ்வொரு அணிகளும் எவ்வளவு தூரம் பயணம் செய்யப் போகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.அதிகபட்சமாக rcb அணி தான் இந்த தொடரில் 17 ஆயிரத்து 84 கிலோ மீட்டர் பயணம் செய்ய இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக சிஎஸ்கே அணி 16,184 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய உள்ளது.
மற்ற அணிகள் பயணம் தூரம்:
மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணி 14341 கிலோ மீட்டரும், கொல்கத்தா அணி 13537 கிலோ மீட்டரும் பயணம் செய்ய இருக்கிறார்கள். ராஜஸ்தான் அணி 12730 கிலோமீட்டர் தூரமும், மும்பை இந்தியன்ஸ் அணி 12702 கிலோமீட்டர் பயணம் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. பவுலர்களுக்கு ஜாலி.. 4 ஆண்டு தடை நீக்கம்.. பிசிசிஐ அதிரடி உத்தரவு.. முழு விவரம்
குஜராத் அணி 10 405 கிலோமீட்டர் லக்னோ அணி 9747 கிலோ மீட்டர் பயணம் செய்கிறார்கள்.டெல்லி அணி 9270 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய இருக்கிறார்கள்.இந்த தொடரிலே சன்ரைசர்ஸ் அணி மட்டும்தான் குறைந்தபட்சம் 8536 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய இருக்கிறார்கள்.