சின்னசாமி மைதானத்தில் நடந்த செயலுக்கு, விராட் கோலிக்கு அபராதம் – ஐபிஎல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!

0
1943

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் விராட் கோலி நடந்து கொண்ட விதத்திற்கு ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்து போட்டியிலிருந்து 10 சதவீதம் அபராதம் விதித்திருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று பின்வருமாறு காண்போம்.

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 226 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த இமாலய இலக்கை பின்தொடர்ந்த ஆர்சிபி அணிக்கு மேக்ஸ்வெல் மற்றும் டூ ப்ளசிஸ் இருவரும் சேர்ந்து அபாரமாக விளையாடி இலக்கை நெருங்கி விடலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தனர். பின்னர் சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தியதோடு, அடுத்து வந்தவர்களின் விக்கெட்டையும் வரிசையாக எடுத்தனர்.

20 ஓவர்களில் 218 ரன்களுக்கு சுருட்டி 8 விக்கெட்டுகளையும் சிஎஸ்கே அணி வீழ்த்தியது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது சிஎஸ்கே அணி.

போட்டியில் விராட் கோலி நடந்து கொண்ட செயலுக்கு ஐசிசி நிர்வாகம் அவரது போட்டி சம்பளத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. அத்துடன் வன்முறையை தூண்டும் விதமாக நடந்து கொண்டதாக முதல்கட்ட தண்டனையான வார்னிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த செயலை “லெவல் ஒன்” என்கிற அடிப்படையில் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

எதற்காக இத்தகைய அபராதம் விராட் கோலிக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தற்போது வரை தெரியவில்லை. ஆனால் அணியின் தரப்பில் இருந்து வெளிவரும் தகவலின் படி, “சிவம் துபே, ஆர்சிபி பவுலர்களை சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விலாசி மிகப்பெரிய தலைவலியை கொடுத்து வந்தார். இவர் மட்டுமே 5 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 27 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். இவரது விக்கெட்டை எடுத்த பிறகு ஆக்ரோஷமாக விராட் கோலி கொண்டாடினார்.

ஆக்ரோஷமான விராட் கோலி. நன்றி: twitter

ஐபிஎல் விதிப்படி, வீரர்கள் வன்முறையை தூண்டும் விதமாக கொண்டாடினாலோ அல்லது பேசினாலோ இதுபோன்ற தண்டனை விதிக்கப்படும். விராட் கோலி கொண்டாடிய விதமும் இதற்கு கீழே வருவதால் இத்தகைய அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.