சேப்பாக்கத்தில் ஆர்சிபி-யின் பரிதாப நிலை .. மாஸ் காட்டும் சிஎஸ்கே மொத்த புள்ளி விபரங்கள்

0
101
CSK

ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களின் கோட்டையான சேப்பாக்கம் சென்னை மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 17ஆவது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் இன்று எதிர்கொள்கிறார்கள்.

பொதுவாக ஐபிஎல் தொடரில் தங்களுடைய சொந்த மைதானத்தில் எந்த அணி அதிக வெற்றிகளை பெறுகிறதோ, அந்த அணி தான் சீராக ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல முடியும். இந்த வகையில் ஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சொந்த மைதானம் மிக சாதகமான ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒட்டுமொத்தம் மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளின் செயல்பாடுகளை பார்க்கலாம்.

- Advertisement -

பறக்கும் சிஎஸ்கே-வின் கொடி

இதுவரையில் சி எஸ் கே மற்றும் ஆர்சிபி அணிகள் நேருக்கு நேராக ஐபிஎல் தொடரில் மொத்தம் 31 போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. இதில் 20 போட்டிகளில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி ஆதிக்கம் செலுத்த, ஆர்சிபி அணி 10 போட்டிகளில் வென்று இருக்கிறது. ஒரு போட்டி முடிவில்லாமல் இருந்திருக்கிறது. கடைசி சீசனில் இந்த இரண்டு அணிகளும் பெங்களூர் மைதானத்தில் மோதிய போட்டியில், சிஎஸ்கே அணி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு அணிகளும் மொத்தம் எட்டு முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி இருக்கின்றன. சந்தேகத்திற்கு இடமில்லாமல் இதில் 7 போட்டிகளில் வென்று சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு போட்டியில் மட்டுமே ஆர்சிபி வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக 2019 ஆம் ஆண்டு இங்கு இரு அணிகளும் மோதிய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்று இருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணி இதுவரையில் 64 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இதில் 48 போட்டிகளில் வெற்றி, 18 போட்டிகளில் தோல்வி அடைய, ஒரு போட்டி முடிவில்லாமல் சென்று இருக்கிறது. இந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆக இருக்கிறது. குறைந்த ஸ்கோராக 2019ஆம் ஆண்டு மும்பைக்கு எதிராக 109 ரன்கள் எடுத்தது இருக்கிறது.

- Advertisement -

இரண்டு அணிகளும் மோதிக்கொண்டதில் விராட் கோலி 30 போட்டிகளில் 985 ரன்கள், தோனி 28 போட்டிகளில் 740 ரன்கள், சுரேஷ் ரெய்னா 25 போட்டிகளில் 616 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அதே சேப்பாக்கத்தில் விராட் கோலியின் ஆவரேஜ் 30 ரன்கள் இருந்தாலும் அவருடைய ஸ்ட்ரைக்ரேட் 111 தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சேப்பாக்: சிஎஸ்கே குஜராத் போட்டி டிக்கெட் விலை அதிரடி குறைப்பு.. விற்பனை தேதி அறிவிப்பு

இரண்டு அணிகள் நேருக்கு நேர் சந்தித்து விளையாடிக் கொண்டதில் ஒட்டுமொத்தமாக ரவீந்திர ஜடேஜா 18 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகள், டிவைன் பிராவோ 17 போட்டிகளில் 17 விக்கெட்டுகள், ஆல்பி மோர்கள் 12 போட்டிகளில் 15 விக்கெட் எடுத்து, முதல் மூன்று இடங்களில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களே இருக்கிறார்கள்.