ஆர்சிபி அணியில் பயிற்சியாளர்கள் அதிரடி நீக்கம்; முன்னாள் சிஎஸ்கே அதிரடி வீரர் புதிய பயிற்சியாளர்?!

0
2709
RCB

இன்று உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய ஒரு தனிப்பட்ட டி20 தொடராக இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐபிஎல் டி20 தொடர் இருக்கிறது!

இந்த ஐபிஎல் டி20 தொடரில் ஐந்து முறை கோப்பைகளை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மிகப்பெரிய ரசிகர்களின் படையையும், சந்தை மதிப்பையும் கொண்டுள்ள அணிகளாக இருக்கின்றன.

- Advertisement -

அதே சமயத்தில் இவர்களுக்கு ஈடாக ரசிகர்கள் பலத்திலும், சந்தை மதிப்பிலும் போட்டியிடக் கூடிய அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட இந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு முறையை கூட கோப்பையை வெல்லா விட்டாலும் அந்த அணிக்கு எப்பொழுதும் பெரிய அளவிலான ரசிகர்கள் பலம் இருந்து வருகிறது. அந்த அணியில் அதிரடியான பல நட்சத்திர வீரர்கள் இடம் பெற்று விளையாடியிருக்கிறார்கள். தற்போதைய ரன் மெஷின் விராட் கோலி வரை அங்குதான் இருக்கிறார்.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பாக பெங்களூர் அணி தரப்பில் இருந்து ஒரு அதிரடியான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெஸன் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் இருவரும் அந்த பொறுப்பில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

மைக் ஹெசன் நியூசிலாந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து அந்த அணி 2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்லும் வரை பணியாற்றி பின்பு விலகினார். அதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் பயிற்சியாளராக இருந்தார். இதற்கு அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக வந்தார்.

சஞ்சய் பாங்கர் இந்திய அணியின் முன்னாள் மித வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர். இவர் 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்கான பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின்பு 2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார். இதற்கு அடுத்து அந்தப் பதவிக்கு கும்ப்ளே வர மீண்டும் பேட்டிங் பயிற்சியாளர் ஆனார். ஒரு வருடத்தில் அவர் பதவி விலக இவர் மீண்டும் இடைக்கால பயிற்சியாளராக இருந்தார். இதற்கு அடுத்து ரவி சாஸ்திரி வரை மீண்டும் பேட்டிங் பயிற்சியாளராக தொடர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டுடன் இந்திய அணியில் இருந்து வெளியில் வந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக தொடர்ந்தார்.

இப்படியான நிலையில் இந்த இருவரும் தற்பொழுது பயிற்சியாளர் பொறுப்பில் தொடரவில்லை என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அறிவித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. மேலும் இந்த இடத்திற்கு யார் வருவார்கள் என்கின்ற கேள்வியும்எழுப்பப்படுகிறது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர அதிரடி ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

இதை வைத்து தற்பொழுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஷேன் வாட்சன் தலைமை பயிற்சியாளராக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இவர் முன்னாள் ஆர்சிபி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.