சிஎஸ்கேக்கு எதிரா செம்ம பிளான் இருக்கு.. பட்டிதாரை இதுக்குதான் கேப்டனாவே ஆக்கினோம் – தினேஷ் கார்த்திக் உடைக்கும் சீக்ரெட்

0
32

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அணிகளும் இந்த தொடருக்கு மிக தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் சிஎஸ்கே அணிக்கு எதிராக திட்டம் குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி அணியின் ஆலோசகர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, இந்த முறை அனுபவம் மற்றும் இளமை என அனைத்து விதத்திலும் சரியான வீரர்களை தேர்வு செய்து அணியை வலுவாக கட்டமைத்துள்ளது. மேலும் இந்த அணிக்கு இளம் வீரரான ரஜத் பட்டிதாரை கேப்டனாகவும் நியமித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வருகிற 28ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டி ரசிகர்களிடையே அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சென்னை அணிக்கு எதிரான திட்டம் குறித்தும், ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் குறித்தும் ஆலோசகர் தினேஷ் கார்த்திக் சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த இரண்டு விஷயங்கள் தான் காரணம்

இது குறித்த தினேஷ் கார்த்திக் கூறும் போது “நாங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நிச்சயமாக திட்டமிட்டு விளையாட வருவோம். எங்களது இரண்டாவது போட்டியான அதில் நாங்கள் நிச்சயம் சிறப்பான திட்டத்தோடு வருவோம் அதில் எந்த பதட்டமும் வேண்டாம். உள்நாட்டுத் தொடரில் ரஜத் பட்டிதார் மத்திய பிரதேச அணியை வழிநடத்திய விதம் மிகவும் அருமையாக இருந்துள்ளது. அவர் உள்நாட்டு அணியை வழி நடத்திய விதம் குறித்து வீரர்கள் நிறைய நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க:இந்திய அணி எதை நம்பி இருக்கோ.. அதற்கு தகுந்த வீரர்கள் எங்களிடம் இருக்காங்க – தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் பேட்டி

அது எங்களுக்கு நல்ல ஊக்கமளிக்க கூடிய விஷயமாக இருந்தது. மேலும் இந்த சீசனில் புதிய வீரர்களின் குழுவாக அணியிருப்பதால் எங்களுக்கு ஒரு புதிய வீரர் தலைவனாக தேவைப்பட்டார். மேலும் இது ஒரு புதிய சுழற்ச்சியாகவும் இருக்கப்போகிறது. இந்த இரண்டு விஷயங்கள்தான் எங்களுக்கு ரஜப் பட்டி தாரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டியது” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். எனவே இந்த முறை ஆர்சிபி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இரண்டு இளம் கேப்டன்களோடு விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -