இதுதான் நேற்றைய தோல்விக்கு காரணமா? முதல் போட்டியில் இருந்த ஆர்சிபி வீரர்.. ஐபிஎல் விட்டே மொத்தமாக விலகல் – ஆர்சிபி கோச் கொடுத்த அப்டேட்!

0
278

தோள்பட்டை பிசகு ஏற்பட்டு இரண்டாவது லீக் போட்டியில் விளையாடாமல் இருந்த ரீஸ் டாப்லி, ஐபிஎல் விட்டு விலகுகிறார் என்று அப்டேட் கொடுத்திருக்கிறார் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த வருட சீசனின் முதல் போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. அபார வெற்றியும் பெற்றது.

- Advertisement -

ஆனால், அப்பொடியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி போட்டியில் நடுவே தோள்பட்டையில் பலமாக அடிபட்டதால், முழுமையாக ஓவர்களை முடிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். இதனால் இரண்டாவது லீக் போட்டியிலும் அவரால் விளையாடமுடியவில்லை.இரண்டாவது லீக் போட்டியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம் என கேப்டன் பாப் டு பிளசிஸ் பேட்டி அளித்தார். ரீஸ் டாப்லி பதிலாக டேவிட் வில்லே உள்ளே எடுத்து வரப்பட்டார்.

ரீஸ் டாப்லி, எப்படி இருக்கிறார்? அவரது காயம் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது? ஆகிய சந்தேகங்கள் எழுந்துவந்த நிலையில், போட்டி நடந்து கொண்டிருக்கையில், தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் போட்டியின் நடுவே பேட்டியளித்தபோது அப்டேட் கொடுத்தார். அவர் கூறுகையில்,

“எங்களது வீரர்கள் அடிக்கடி காயம் அடைவதை பார்க்க முடிகிறது. அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். தோள்பட்டையில் அடிபட்டு இருக்கும் ரீஸ் டாப்லியை அவரது நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். விரைவில் மாற்று வீரரையும் அறிவிப்போம்.” என்று பேசினார்.

- Advertisement -

ரீஸ் டாப்லி காயம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரவில்லை. அதற்குள் சஞ்சய் பாங்கர் இப்படி பேசியதால், அவர் ஐபிஎல் விட்டு விலகுகிறார் என்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே ஆர்சிபி அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரஜத் பட்டிடார், காலில் காயம் ஏற்பட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்து மொத்தமாக விலகினார். இவர் ஐபிஎல் துவங்கும் முன்பு பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். திடீரென காயம் ஏற்பட்டு முதன்மை போட்டிகளுக்கு முன்பு வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார்.

தற்போது மீண்டும் ஒரு வீரர் இப்படி வெளியேறி இருப்பது ஆர்சிபி அணிக்கு சற்று பின்னடைவை தந்திருக்கலாம். ஆனால் அதற்குள் இரண்டு முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள் என்று அப்டேட் கொடுத்திருக்கிறார் சஞ்சய் பாங்கர். அதே பேட்டியில் அவர் பேசியபோது,

“ஹசரங்கா வருகிற 10ஆம் தேதி ஆர்சிபி அணியுடன் இணைகிறார். ஹேசல்வுட் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி அணியுடன் இணைகிறார். இவர்கள் அணிக்கு திரும்புவதால் யாரை பிளேயிங் லெவனில் எடுப்பது யாரை வெளியில் அமர்த்துவது என்கிற ஆரோக்கியமான தலைவலி எங்களுக்கு இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கிய ஆர்சிபி அணிக்கு, இரண்டாவது போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. கொல்கத்தா அணியிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து ரன்ரேட்டில் மிகப்பெரிய அடியை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது