பெங்களூர் தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியல் வெளியீடு – சாஹல், ஹர்ஷல் பட்டேல் மற்றும் வேறு 2 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொள்ளாததற்கு காரணம் என்ன ?

0
181
Virat Kohli Chahal and Harshal Patel

அனைவரும் எதிர்பார்த்த அந்த ஒரு நாள் இன்று வந்து விட்டது. அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு ஒவ்வொரு அணியும் தங்களுடைய பழைய வீரர்கள் பட்டியலிருந்து எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறார்கள் என்பது இன்று முடிவாகும். இன்றைக்குள் ஒவ்வொரு அணியும் இனி வரும் ஐபிஎல் தொடர்களுக்கு தகுந்தவாறு தக்க வைக்கப் போகும் வீரர்களைத் தேர்ந்தெடுத்து கூற வேண்டும் என்று கட்டளை விடுத்திருந்தது.

அதனடிப்படையில் இன்று 8 அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம். இதற்கு இடையில் ஒவ்வொரு அணி நிர்வாகமும் இந்த வீரர்களை தான் தக்க வைக்கப் போகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாக கசிந்து வருகின்றன. அதில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வைக்கப்போகும் வீரர்களின் பெயரும் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தக்க வைத்துக் கொண்ட மூன்று வீரர்கள்

ஏபி டிவில்லியர்ஸ் அதிகாரபூர்வமாக அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். எனவே ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதனுடைய பழைய வீரர்கள் பட்டியலில் இருந்து விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் மற்றும் சிராஜை தக்கவைத்துக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த அணியின் நட்சத்திர ஸ்பின்னர் சஹால் மற்றும் திறமை வாய்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரன ஹர்ஷல் பட்டேலை தக்க வைக்கப் பட போவதில்லை என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆர்சிபி அணி ரசிகர்களும் மிகப்பெரிய ஆச்சரியத்தில் உள்ளனர்.

மெகா ஏலத்தில் மேற்கூறிய வீரர்களை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்க முயற்சிக்கும் என்று ஒருபக்கம் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் மறுபக்கம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் முற்றிலுமாக மாறுபட்ட ஒரு அணியை கட்டமைக்க விரும்புகிறது. அதன் முடிவாகவே விராட் கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோரை மட்டும் தக்க வைத்துள்ளது என்றும் ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -