இந்திய கிரிக்கெட்

மொபைல் நம்பரை மாற்றி தலைமுறைவான ஆர்சிபி சாம்பியன் இந்திய வீரர்.. பயிற்சிக்கும் வரவில்லை – என்ன நடக்கிறது?

கடந்த ஆண்டு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இந்திய வீரர் ஒருவர் மொபைல் நம்பரை மாற்றி தலைமறைவாகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இதுவரையிலான 18 ஐபிஎல் சீசன்களின் முதல் முறையாக கடந்த முறை ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இப்போது நல்ல அணி கிடைத்திருக்கின்ற காரணத்தினால் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல முழு மூச்சுடன் ஆர்சிபி அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தலைமுறைவான வீரர்

கடந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த இடதுகை இந்திய வேகப் பந்துவீச்சாளர் யாஷ் தயால் தற்போது தன்னுடைய மொபைல் நம்பரை மாற்றி விட்டு தலைமறை வாங்கி விட்டார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

அதேசமயத்தில் ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் அதன் அதிகாரிகள், அவரது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்க அதிகாரிகள், என்சிஏ எக்ஸலன்ஸ் என யாருமே அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் கடைசியாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். அதற்குப் பிறகு அவர் உள்நாட்டு போட்டிகளில் கூட விளையாடவில்லை.

- Advertisement -

என்ன காரணம்?

அவர் ஒரு மைனர் பெண்ணுக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் உதவி செய்வதாக கூறி பாலியல் அத்துமீறல்களை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் தனது மொபைல் நம்பரை மாற்றி தலைமறைவாகி இருக்கிறார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: ஆர்சிபி இன்னும் 2 கப் அடிக்கும்.. ஹேசில்வுட் ஆடாதது கூட வரம் தான்.. இப்படி செட் பண்ணுவாங்க – அஸ்வின் பேச்சு

கடந்த இருபதாம் தேதி ஆர்சிபி அதிகாரப்பூர்வமாக பயிற்சியை ஆரம்பித்தது. இந்த பயிற்சியில் யாஷ் தயால் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவருடைய புகைப்படம் ஆர்சிபி பேருந்தில் வைக்கவில்லை. ஆர்சிபி அணி நிர்வாகம் அவரை அணியை விட்டு நீக்க ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -
Published by

Recent Posts