தற்போது இருக்கும் ஆர்சிபி அணியை வைத்து இரண்டு வருடங்களில் இன்னொரு ஐபிஎல் கோப்பையை அவர்களால் வெல்ல முடியும் என ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார்.
இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் அணிகளில் பல முன்னாள் வீரர்கள் தங்களுடைய முதல் அணியாக ஆர்சிபி அணியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஆர்சிபி அணி வலிமையானதாக உள்ளது.
சுரேஷ் ரெய்னா கணிப்பு
சிஎஸ்கே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஆர்சிபி அணி எதனால் பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பது குறித்து மிகவும் முக்கியமான விஷயம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். 2010 மற்றும் 11ம் ஆண்டில் சிஎஸ்கே தொடர்ந்து இரண்டு முறை கோப்பைகளை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த காலகட்டத்தில் சிஎஸ்கே அணியில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் 7 பேர் இடம் பெற்று இருந்தார்கள். தற்போது ஆர்சிபி அணியும் அதேபோல சர்வதேச கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் எண்ணிக்கை உள்ளது. இதுவே அந்த அணியை பலம் வாய்ந்ததாக மாற்றுவதாக சுரேஷ் ரெய்னா கூறியிருந்தார்.
இன்னும் ஒரு கோப்பை உறுதி
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இந்த அணியை வைத்துக்கொண்டு ஆர் சி பி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இன்னும் ஒரு கோப்பையை வெல்ல முடியும். ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது எளிதான காரியம் கிடையாது. ஆனால் அவர்களிடம் நல்ல கட்டமைப்பும், எல்லா வீரர்களுக்கும் தேவையான மாற்று வீரர்களும் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : இங்க யாரும் ஒரு நொடி கூட வீணாக்க கூடாது.. நீங்க எல்லாரும் இத செஞ்சே ஆகணும் – விராட் கோலி ஆர்டர்
“அவர்கள் தங்கள் குறைகளை சரி செய்த விதத்தில் அவர்கள் முதல் இரண்டு இடங்களில் வரக்கூடிய அணியாக இருக்கிறார்கள். தற்போது ஹேசில்வுட் இல்லாதது கூட ஒரு வரமாக அவர்களுக்கு மாறி உள்ளது. ஏனென்றால் சால்ட் மற்றும் பெத்தேல் இருவரையும் களம் இறங்குவார்கள். ஹேசில்வுட் வரும்போது நிலைமை இன்னும் தெளிவாக மாறிவிடும்” என்று கூறியிருக்கிறார்.






