நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் விளையாடிய போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. இந்த போட்டியில் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்றது. இதே போட்டியில் புல்டாஸ் நோபால், கிரீஸ் நோபால் மற்றும் சிக்ஸருக்கு பதிலாக பவுண்டரி தந்தார்கள் என பல சர்ச்சைகள் சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து ஆர்சிபி அணியின் வீரர் ரீஸ் டாப்லி பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 20 ஓவர்களில் 222 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணிக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் அந்தக் கடைசி ஓவரில் ஆர்சிபி அணி 20 ரன்கள் சேர்த்தது. எனவே பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் கே கேஆர் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் போது மூன்றாவது ஓவரில் ஹர்ஷித் ராணா ஃபுல் டாஸ் ஆக விராட் கோலிக்கு ஒரு பந்தை வீசினார். கிரீசுக்கு வெளியே நின்று விளையாடிய விராட் கோலியின் நெஞ்சுக்கு அந்த பந்து வந்தது. சுதாரிக்க முடியாத விராட் கோலி பேட்டை நீட்ட வந்து ஹர்ஷித் ராணா கைகளில் கேட்ச் ஆனது.
எப்படியும் இந்த பந்து நோ பாலாக இருக்கும் என பலரும் நினைத்திருந்த நிலையில், நடுவர்கள் கிரீசில் விராட் கோலி நின்று இருந்தால், பந்து இடுப்புக்கு கீழே வந்திருக்கும் எனக் கூறி, விராட் கோலிக்கு அவுட் கொடுத்து விட்டார்கள். அப்போது அவர் 7 பந்துகளில் அதிரடியாக 18 ரன்கள் எடுத்திருந்தார். தற்பொழுது ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த காரணத்தினால் இது பெரிய சர்ச்சையாக மாறி வருகிறது.
இதுகுறித்து ஆர்சிபி வீரர் ரீஸ் டாப்லி பேசும்பொழுது ” வெளிப்படையாக விராட் கோலி கிரீசுக்கு வெளியில் இருந்தார். பந்து அவரது இடுப்புக்கு மேல் இருந்தது. ஆனால் விராட் கோலி கிரீஸ்க்குள் இருந்தால் எப்படி இருக்கும் என அளவுகள் எடுக்கப்பட்டது. இது இந்த இடத்தில் ஒரு கிரே ஏரியா. எனவே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை தவற விடப்படும் பொழுது இந்த விஷயங்கள் பெரிதாக பேசப்படும்.
இதையும் படிங்க : 16.5 ஓவர்.. ஆர்சிபி-க்கு சிக்ஸ்க்கு ஃபோர் கொடுக்கப்பட்டதா.. உண்மையில் நடந்தது என்ன?
இதில் என்னுடைய கருத்து என்னவென்று நீங்கள் கேட்டால், இது கடினமான ஒன்று. இரண்டு தரப்புக்கும் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கலாம். எங்கள் அணியின் பக்கமாக இது ஒரு தெளிவில்லாத தீர்ப்பாக இருந்தது. எனவே விதிகளை இன்னும் கொஞ்சம் தெளிவாக வைப்பது நல்லது” எனக் கூறியிருக்கிறார்