பெங்களூர் அணியுடன் மேக்ஸ்வெல் இணைந்த பின்பும் போட்டியில் ஆட முடியாமல் போனதற்கு ஆஸ்திரேலிய நிர்வாகம் தான் காரணம் – மைக் ஹெஸன் அதிரடிப் பேச்சு

0
1175
Glenn Maxwell and Mike Hesson

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் பதின்மூன்றாவது ஆட்டம், பாஃப் டூ பிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலன்ஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணிக்கும் இடையே, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களான கிளைன் மேக்ஸ்வெல்லும், ஹசில்வுட்டும் பங்கேற்க கூடுமென்று பெங்களூர் இரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தனர். காரணம் மேக்ஸ்வெல் அணியோடு சில நாட்களுக்கு முன்பே இணைந்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இன்றைய போட்டியில் பெங்களூர் ஆடும் அணியில் ஹசில்வுட் இடம்பெறாதது கூட இரசிகர்களுக்கு ஆச்சரியமாகவோ, அதிர்ச்சியாகவோ இல்லை. ஆனால் அணியில் ஏற்கனவே இணைந்துவிட்ட மேக்ஸ்மெல் இல்லாததுதான் ஆச்சரியம், அதிர்ச்சி என்பதைத் தாண்டி பெங்களூர் இரசிகர்களுக்குக் குழப்பமாகவும் இருந்தது.

இந்த நிலையில் இதுக்குறித்துப் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹசன் தெளிவுப்படுத்தியுள்ளார். அதில் “ஆஸ்திரேலியாவின் வீரர்கள் ஒப்பந்த விதிகளின்படி வீரர்கள் ஐ.பி.எல் அணியோடு எப்போது இணைந்தாலும், ஏப்ரல்-6-ஆம் தேதிக்கு முன் விளையாட முடியாது என்பது தெளிவாகிறது. இதனால் அணியோடு முன்பே இணைந்திருந்தாலும் ஏப்ரல்-9ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில்தான் விளையாடுவார்” என்று கூறியுள்ளார்!