ஒருவழியாக ஆறாவது போட்டியில் ஆர் சி பி அணி முதல் வெற்றியை பெற்றது!

0
385
RCB

இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டு முதல் முறையாக பெண்களுக்கான ஐபிஎல் தொடரை மும்பையில் வைத்து நடத்தி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஐந்து அணிகள் இடம் பெற ஒவ்வொரு அணிக்கும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு போட்டிகள் என எட்டு போட்டிகள் நடைபெறும். எட்டு போட்டிகளில் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணி குவாலிஃபயர் சுற்றிலும் விளையாடும். நான்காவது ஐந்தாவது இடம் பிடித்த அணி வெளியேறும்!

இன்று பெண்கள் ஐபிஎல் தொடரில் 13 வது ஆட்டத்தில் டி ஒய் பாட்டில் மைதானத்தில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் உத்தர பிரதேச அணியும், ஐந்து ஆட்டங்களில் ஐந்தையும் தோற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். உத்தரப்பிரதேச அணியின் கேப்டன் துவக்க வீராங்கனை அலிசா ஹீலி ஒரு ரன்னிலும், மற்றும் ஒரு துவக்க வீராங்கனை வைத்யா ரன் ஏதும் இல்லாமலும் சோபி டிவைன் பந்துவீச்சில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து வந்த நவிகிரே 22 ரன்னிலும், தாகிலா மெக்ராத் இரண்டு ரன்னிலும், தீப்தி சர்மா 22 ரன்னிலும் வெளியேற, மற்றொரு முனையில் விளையாடிய கிரேஸ் ஹாரிஸ் 32 பந்தில் ஐந்து பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 46 ரன்கள் எடுக்க, 19.3 ஓவர்களில் உத்தரபிரதேச வாரியர்ஸ் அணி 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பெங்களூர் அணி தரப்பில் எலைஸ் பெரி மூன்று விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு இந்த முறையும் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஏமாற்றம் அளித்து ரன்கள் ஏதும் இல்லாமல் வெளியேறினார். மற்றும் ஒரு துவக்க வீராங்கனை சோபி டிவைன் 13 ரன்கள், எலைஸ் பெரி 10 ரன்கள், ஹீதர் நைட் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்த ஜோடி சேர்ந்த கனிகா அகுஜா மற்றும் ரிச்சா கோஸ் இருவரும் சேர்ந்து 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணி வெல்வதற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்தார்கள். கனிகா அகுஜா 30 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 46 ரன்கள் எடுத்தார். ரிச்சா கோஸ் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 32 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். 18 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை எட்டி, பெங்களூர் அணி இந்த முதல் பெண்கள் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

முதல் ஐந்து ஆட்டங்களில் பெங்களூர் அணி தோற்று இருந்தாலும் இன்னும் ஒரு சிறு வாய்ப்பு பெங்களூர் அணிக்கு இருக்கவே செய்கிறது. ஆனால் அந்த வாய்ப்பின் மூலம் குவாலிபயர் சுற்றில் பெங்களூர் அணி வருவது மிக மிக கடினமான விஷயம்!