விராட் கோலி மேல அதிக கவனம் வைக்காதீங்க.. அவரோட லட்சியம் இப்போ ஒரே விஷயம்தான் – ஆர்சிபி இயக்குனர்

0
71

18வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து ஆர்சிபி இயக்குனர் மோ போபட் சில முக்கிய கருத்துக்கள் பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஆர்சிபி கொல்கத்தா மோதல்

ஐபிஎல் தொடரின் மீதம் உள்ள போட்டிகள் இன்று முதல் நடைபெற இருக்கிறது. இன்று நடைபெற உள்ள 58 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் பதடத்தின் காரணமாக ஐபிஎல் தொடரானது ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி நட்சத்திர ஜாம்பவான் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

இது பலரிடையே ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இன்று விளையாட உள்ள விராட் கோலி மீது ரசிகர்கள் அதிக அளவிலான கவனத்தையும் அன்பையும் பொழிவார்கள். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலிக்கு பிரியாவிடை கொடுக்கவும் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆர்சிபி இயக்குனர் போபட் இதுகுறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் கவனம் இதுதான்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி எப்பொழுதும் போலவே தனது வேலையை செய்வதில் கவனமாக இருக்கிறார். பொதுமக்களும் நாடும் அவர் மீது போதுமான அளவு கவனத்தை வைத்திருக்கிறது. அதற்கு மேல் அவருக்கு வேறு எதுவும் தேவையில்லை. ஆர்சிபி மீதும் இந்த தொடரில் நாம் என்ன சாதிக்க முடியும் என்பது குறித்தும் விராட் கோலி லட்சியமாக இருக்கிறார். இப்போது அவரது கவனமும் அதில் மட்டுமே தான் இருக்கிறது. இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் வீரராக அவர் செய்த சாதனைகள் நம்ப முடியாது அளவிற்கு இருக்கிறது என்று சொல்ல நான் பெருமைப்படுகிறேன்.

இதையும் படிங்க:விராட் ரோகித்திடம் இருக்கும் ஸ்பெஷல் விஷயம் சுப்மான் கில்லிடம் இருக்கு.. பெரிய கேப்டனா வருவார் – சுரேஷ் ரெய்னா நம்பிக்கை

ஒரு அணியாக ஆர்சிபி அணி எங்கள் வீரர்கள் ஒவ்வொருவரும் இந்திய சட்டையில் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். குறிப்பாக அவர் 120 டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதும், 10000க்கும் அதிகமான ரன்கள் குவிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு டெஸ்ட் கேப்டனாக அவரது வெற்றி சதவீதம் 60 என்பது சாதாரண விஷயமே கிடையாது. 2018ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடியது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதில் ஆண்டர்சன் 9 ஓவர்கள் விராட் கோலிக்கு வீசி இருக்கிறார் என்பதன் குறிப்பிடத்தக்கது” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -