இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கு விரைவில் இளம் கிரிக்கெட் வீரரான சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் கில் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கில் குறித்து சுரேஷ் ரெய்னா
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக விளங்கிவரும் சுப்மான் கில் அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணிக்கு வருங்கால டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார் என்கிற தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அணியின் சீனியர் வீரரான ரோகித் ஷர்மா டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
அதேபோல மற்றொரு சீனியர் வீரரான விராத் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெஸ்ட் ஃபார்மேட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் தற்போது இந்திய அணி பெரும்பாலும் இளம் வீரர்கள் உடன் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கில் குறிப்பிடத்தக்க நம்பிக்கை மற்றும் ஆற்றலோடு செல்ல வேண்டுமானால் அவருக்கு தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டியது அவசியமான ஒன்றாக இருக்கும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.
இதை அவர் தேடிக் கொண்டிருக்கிறார்
இதுகுறித்து அவர் விரிவாகக் கூறும்போது “கில் தற்போது ஐபிஎல் கோப்பையை தேடிக் கொண்டிருக்கிறார். ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கினால் அவர் சிறப்பாக முன்னேறுவது மட்டுமல்லாமல் டிரெஸ்ஸிங் ரூமில் அவருக்கு சிறப்பான மரியாதையும் கிடைக்கும். இப்போது இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா என்ற இரண்டு சீனியர் வீரர்கள் கிடையாது.
இதையும் படிங்க:இதை நான் சொல்லலாமானு தெரியல.. ஆனா அப்போ தோனி சொன்னது இப்போ சிஎஸ்கேகிட்ட இல்ல – ஆஸி டாம் மூடி பேட்டி
அவர்கள் இருவருமே எதிரணியின் கண்களைப் பார்த்து அவர்களை அழுத்தத்தில் ஆழ்த்துவார்கள். அது ஆற்றல், குணம் மற்றும் உடல் மொழியில் வருகிறது. அந்த விஷயம் கில்லுக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது” என சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார். குஜராத் அணி தற்போது கில் தலைமையின் கீழ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வருட ஐபிஎல் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளின் ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






