இதுவரையில் தனிப்பட்ட முறையில் எந்த அணிக்கும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இல்லாத கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து மற்றும் தற்பொழுது ஆர்சிபி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜிம்பாப்வே சேர்ந்த ஆன்டி பிளவர் இது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார்.இதுவரையில் தனிப்பட்ட முறையில் எந்த அணிக்கும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இல்லாத கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து மற்றும் தற்பொழுது ஆர்சிபி அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஜிம்பாப்வே சேர்ந்த ஆன்டி பிளவர் இது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார்.
கவுதம் கம்பீர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு இரண்டு ஆண்டுகள்வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அந்த அணியில் அப்போது தலைமை பயிற்சியாளராக ஆன்டி பிளவர் இருந்தார். இதற்கு அடுத்து இந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு வழிகாட்டியாக இருந்தார். ஆனால் ஒரு அணியை முன்னின்று பயிற்சியாளராக அவர் வழி நடத்தியது இல்லை.
தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் ஆன்டி பிளவர் கூறும் பொழுது “கம்பீர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளருக்கான சில குணங்களை பெற்றிருக்கிறார். அவர் பயிற்சியாளரா இல்லையா? என்பதை தாண்டி, அவர் ஒரு வழக்கமான பயிற்சியாளர் கிடையாது. அவர் வழக்கமான பயிற்சியாளர்களை விட ஒரு உத்வேகமான லீடராகத்தான் இருப்பார். அவர் மிகவும் துல்லியமானவர். மேலும் தனது சொந்த கொள்கை மற்றும் முடிவுகளின் மீது மிகவும் தைரியமான நம்பிக்கையை வைத்திருப்பவர். இது அவரை மற்றவர்கள் பின் தொடர செய்யும்.
கம்பீருக்கு வலிமையான கருத்துக்கள் இருக்கிறது. அவர் தான் எங்கு செல்ல விரும்புகிறார் என்பது குறித்து அவருக்குத் தெரியும். அவர் கடினமான முடிவுகளை எடுக்க தயாராக இருப்பவர் மேலும் அதே நேரத்தில் தன் அணி எப்படி விளையாட வேண்டும் என்கின்ற தெளிவு இருக்கக்கூடியவர்.
ஐபிஎல் தொடருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணிக்குமான பயிற்சியாளர் பொறுப்பு மிகவும் வித்தியாசமானது. சர்வதேச அணி எனும் பொழுது நீங்கள் நீண்ட காலத்திற்காக ஒரு அணியை உருவாக்குகிறீர்கள்.மேலும் குறிப்பிட்ட அல்லது நீண்ட காலத்திற்கு தனிப்பட்ட வீரர்களை உருவாக்குகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்பது குறுகிய காலத்தைப் பற்றியது.
இதையும் படிங்க : எங்க டீம்ல இவர் ரொம்ப அவசரக்காரர்.. ஆனா அவருக்கு பெரிய இதயம் திறமைசாலி – அர்ஷ்தீப் சிங் பேச்சு
சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் தனிப்பட்ட முறையில் ஆன வளர்ச்சிக்கும் மேலும் அணியின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் நிறைய நேரம் இருக்கும். கம்பீர் 3 வடிவ இந்திய அணிக்கும் பயிற்சியாளராக இருப்பார்.அதனால் இந்த செயல் முறையில் கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கலாம். உதாரணமாக அவர் வெவ்வேறு கேப்டன்கள் உடன் இருக்க வேண்டும். இதில் சிலர் மூத்த வீரர்களாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் உருவாக்கும் கொள்கை மற்றும் கலாச்சாரம், மூன்று வடிவ அணிக்கும் உருவாக்கும் யூனிட் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.