ஆண்கள் ஆர்சிபி கூட எங்கள சேர்த்து வச்சு பார்க்காதிங்க.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டி

0
255
Smiriti

ஐபிஎல் தொடரில் 16 ஆண்டுகளாக மிகச் சிறந்த வீரர்களை கொண்டிருந்த பொழுதும் கோப்பையை வெல்லாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருந்து வருகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலி இருந்து வரும் நிலையில், ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாதது அந்த அணிக்கு எந்த வீரர்கள் வந்தாலும் அது நெருக்கடியாக அழுத்தமாக மாறுகிறது.

இதுவரை நடைபெற்ற 16 ஐபிஎல் சீசன்களில் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடமும், 2011ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடமும், 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடமும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை மூன்று முறை தவறவிட்டு இருக்கிறது. இது தவிர்த்து அந்த அணிக்கு மற்றபடி பெரிய செயல்பாடுகள் ஐபிஎல் தொடரில் இல்லை.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாக கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதே முதலில் மிகப்பெரிய விஷயமாக மாறுகிறது. அதற்குப் பின்பு அந்த சுற்றில் வென்று கோப்பையை கைப்பற்றுவது என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. எனவே இனி ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது என்பது மிகக் கடினமான ஒன்றாகத்தான் இருக்கும்.

இந்த நிலையில் பெண்கள் டீ 20 கிரிக்கெட் லீக்கில் இரண்டாவது சீசன் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக எலிமினேட்டர் சுற்றில் வென்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. நாளை டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. எனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பெயரில் முதல் கோப்பையை வெல்வதற்கான ஒரு சிறப்பான வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் டபிள்யூபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வழிநடத்தி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இறுதிப் போட்டி குறித்தும், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் செயல்பாடுகள் மீதான அழுத்தம் குறித்தும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு ஒட்டுமொத்தமாக என்ன நடந்திருக்கிறது என்பதை இணைத்துப் பார்ப்பதற்கு எங்களுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. எங்களை ஆண்கள் அணியுடன் இணைத்துப் பார்க்கும் பொழுது அது பெரிய அழுத்தத்தை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே எங்களுக்கு இது இரண்டாவது சீசன் தான் என்று நாங்கள் அந்த அழுத்தம் இல்லாமல் விளையாட விரும்புகிறோம்.

இதையும் படிங்க : PSL-க்கு கூட்டமே இல்ல.. எனக்கு பயமா இருக்கு.. ஐபிஎல் மொத்தமா முடிச்சு விடப் போகுது – வாசிம் அக்ரம் வேதனை

டெல்லி அணியின் கேப்டன் ஆஸ்திரேலியாவின் மெக் லானிங்கை நான் எப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன். பேட்டிங்கை மிக அருமையாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கும் ஒருவருடன் உரையாடுவது மிகவும் பயனளிப்பதாக இருக்கிறது. நாளை இறுதிப் போட்டிக்காக நாங்கள் மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறோம். நாங்கள் நல்ல முறையில் செயல்படுவோம்” என்று கூறி இருக்கிறார்