இன்று 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டியின் டாஸ் நிகழ்வில் ஆர் சி பி கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் ஆர்சிபி அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்திருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு காயம் காரணமாக கேப்டன் கம்மின்ஸ் விளையாடாததால் இஷான் கிஷான் கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
புது வீரருக்கு வாய்ப்பு
தற்போது ஆர்சிபி அணியில் பாலியல் புகார் காரணமாக யாஸ் தயால் விளையாடவில்லை. இவருடைய இடத்தில் அபிநந்தன் சிங் என்ற இளம் வீரருக்கு ஆர்சிபி அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வழக்கம் போல் நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்று இருக்கிறார்கள். அவர்களுடைய வேக்ப் பந்து வீச்சு யூனிட் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது.
கோப்பையை மீண்டும் வெல்வோம்
டாஸ் நிகழ்வில் பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் ” நாங்கள் முதலில் பந்து வீச போகிறோம். கடந்த சீசனில் எங்களுக்கு நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. நாங்கள் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற பாதுகாப்பு மனநிலையில் வரவில்லை. நாங்கள் சாம்பியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறோம். அணியில் பல திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வீரர்களுக்கும் சரியான மாற்று வீரர்கள் இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : சாம்சன் 3 வருஷத்துக்கு முன்னவே எனக்கு கீழ விளையாட ரெடி.. அப்பவே அதை விசாரிச்சார் – ருதுராஜ் பேட்டி
“எங்களிடம் சப்போர்ட் சிஸ்டமும் மெடிக்கல் டீமும் இருக்கிறது. இதனால் வீரர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் இந்த போட்டியை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்த முறை நாங்கள் கோப்பையை வெல்வோம். இரண்டாவது ஸ்டார் எங்கள் ஜெர்சியில் இடம்பெறும். ஜேக்கப் டப்பி மற்றும் அபிநந்தன் சிங் இரண்டு புதுமுக வீரர்கள் விளையாடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






