ஐபிஎல் 2025

நாங்க இந்த தவறை செஞ்சிருக்க கூடாது.. போட்டியில் நாங்கள் தோற்க அதுதான் முக்கிய காரணம் – ஆர்சிபி கேப்டன் பேட்டி

நடப்பு ஐபிஎல் தொடரின் 14வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் தோல்வி குறித்து அதன் கேப்டன் ராஜத் பட்டிதார் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

பெங்களூர் அணி தோல்வி

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியை பொறுத்த வரை அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் குஜராத் அணியின் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர் கடைசி வரை நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்தார். 39 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பட்லர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். அவருக்கு சாய் சுதர்சன் 49 ரன்கள் மற்றும் இறுதியில் ரூதர் போர்டு 30 குவித்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

- Advertisement -

இங்குதான் தப்பு செய்தோம்

இந்த நிலையில் தோல்வி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் கூறும்போது “இந்தப் போட்டியை பொறுத்தவரை 200 ரன்கள் கிடையாது. இந்த ஆடுகளத்தில் 190 ரன்கள் நாங்கள் வெற்றி இலக்காக கொண்டிருந்தோம். ஆனால் தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்ததால் இந்த இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. குறிப்பாக நாங்கள் பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகள் இழந்திருக்கக் கூடாது. ஒரு விக்கெட் நாங்கள் அதிகமாக இழந்தோம்.

இதையும் படிங்க:39 பந்தில் 73 ரன்.. ஆர்சிபியின் சொந்த மண்ணிலேயே சம்பவம் செய்த பட்லர்.. சிராஜ் ஸ்பெஷல் பௌலிங்.. குஜராத் சாதனை வெற்றி

இருப்பினும் நிலைமைகள் சிறப்பாக மாறியது. எங்கள் பந்து வீச்சாளர்கள் இந்த இலக்கை எதிரணியைப் போராட வைத்தது அற்புதமாக இருந்தது. இந்த இலக்கை பதினெட்டாவது ஓவர் வரை கொண்டு சென்றதை பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. ஜித்தேஷ், லியாம் மற்றும் டேவிட் ஆகியோர் பேட்டிங் செய்த விதமாக இருந்தது. எனவே நாங்கள் அடுத்தடுத்த போட்டியில் சிறப்பாக முன்னேறுவோம்” என்று அவர் கூறி இருக்கிறார். தொடர்ந்து இரண்டு போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணிக்கு சொந்த மண்ணில் இது முதல் தோல்வியாகும்.

- Advertisement -
Published by

Recent Posts