39 பந்தில் 73 ரன்.. ஆர்சிபியின் சொந்த மண்ணிலேயே சம்பவம் செய்த பட்லர்.. சிராஜ் ஸ்பெஷல் பௌலிங்.. குஜராத் சாதனை வெற்றி

0
395

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் லீக் ஆட்டத்தின் 14வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூர் அணியை வீழ்த்தியது.

- Advertisement -

பெங்களூர் ராஜஸ்தான் மோதல்

இரண்டு போட்டிகளுக்குப் பிறகு ஆர்சிபி சொந்த மண்ணில் விளையாடும் முதல் போட்டி என்பதால் ரசிகர்களிடையே இந்த போட்டி பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. இந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி, முதலில் பந்து வீச தீர்மானித்து பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதில் பெங்களூர் அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 7 ரன்னில் இருந்தபோது குஜராத் அணியின் அர்சத் கான் பந்து வீச்சில் வெளியேறினார். மேலும் பில் சால்ட் 14 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதற்குப் பின்னர் மேலும் இரு விக்கட்டுகள் வரிசையாக விழ மிடில் வரிசை வீரர் லியாம் லிவிங்ஸ்டன் நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு ஜித்தேஷ் ஷர்மா 33 ரன்கள் எடுத்து பார்ட்னர்ஷிப் அமைக்க, லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 54 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 5 சிக்சர்கள் அடங்கும். இறுதியில் டிம் டேவிட் 18 பந்துகள் 32 ரன்கள் குவிக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. குஜராத் அணியில் முன்னாள் ஆர்சிபி வீரர் சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

குஜராத் சாதனை வெற்றி

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 14 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சன் பட்லரோடு ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்தது. பின்னர் சாய் சுதர்சன் 36 பந்துகளில் 49 ரன்கள் குவித்து வெளியேறினார். கடைசி வரை நின்று பட்லர், மிடில் வரிசையில் களமிறங்கிய ரூதர் போர்டுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

இதையும் படிங்க:பும்ரா சூர்யகுமார் யாதவ் இல்லை.. மும்பை அணிக்கு இவரைத்தான் நான் முதலில் இருப்பேன் – ஆஸி முன்னாள் வீரர் பேட்டி

ஆட்டத்தின் 18வது ஓவரை ஹாஸில் வுட் வீச அந்த ஓவரில் 3 சிக்ஸர்கள் விளாசி போட்டியை முடித்தார். 39 பந்துகளை எதிர் கொண்ட பட்லர் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 73 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ரூதர் போர்டு 18 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். 13 பந்துகள் மீதும் வைத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணிக்கு இது இரண்டாவது அதிகபட்ச வெற்றியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -