நேற்று ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தோல்வி அடைந்தது நல்ல விஷயம்தான் என அந்த அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கும் என்ற நிலையில் ஆர்சிபி அணி களம் இறங்கியது. அதே சமயத்தில் ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட ஹைதராபாத் தொடரை வெற்றியுடன் முடிப்பதற்காக களம் இறங்கியது.
ஹேசில்வுட் இல்லாத குறை
நேற்று முதலில் பந்து வீசிய ஆர்சிபி அணியில் ஹேசில்வுட் இல்லாதது வெளிப்படையாகவே பெரிய பிரச்சனையை கொண்டு செய்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டி தவிர வேற எந்த போட்டியிலும் பெரிதாக விளையாடாத இஷான் கிஷான் நேற்று 94 ரன்கள் எடுத்து, ஹைதராபாத் அணியை 20 ஓவர்களில் 235 ரன்கள் குவிக்க வைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணி ஒரு கட்டத்தில் 15 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால் இங்கிருந்து மேற்கொண்டு பதினாறு ரன்கள் மட்டுமே எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதனால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறுவதில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த தோல்வி நல்லதுதான்
இதுகுறித்து கேப்டன் ஜிதேஷ் சர்மா பேசும்பொழுது “நாங்கள் 20 முதல் 30 ரன்கள் கூடுதலாக கொடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் தாக்குதலுக்கு என்னிடம் பதில் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் அந்த நேரத்தில் கொஞ்சம் ரஷ்டியாக இருந்தோம். ஆரம்பத்தில் எங்களிடம் தீவிரம் இல்லை. அதே சமயத்தில் டெத் ஓவர்களில் நாங்கள் துல்லியமாக பந்து வீசினோம். நான் ஆட்டம் இழந்து வருத்தத்தில் இருந்த காரணத்தினால் டேவிட்டை இன்னும் சந்திக்கவில்லை”
இதையும் படிங்க : எல்லா காலத்திலும் சிறந்த இந்திய டெஸ்ட் அணி.. புஜாரா செய்த நெகிழ்ச்சியான சம்பவம்.. ரசிகர்கள் பாராட்டு
“சில நேரங்களில் ஒரு போட்டியை தோற்பது நல்ல விஷயம்தான். ஏனென்றால் நீங்கள் அது குறித்து பகுப்பாய்வு செய்து முன்னேற முடியும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் எங்கள் அணியில் உள்ள எல்லோருமே இந்த தோல்வியிலிருந்து பகுப்பாய்வு செய்வார்கள். இந்தத் தோல்விக்கு பிறகு ஏற்பட்டுள்ள பின்னடைவில் இருந்து நாங்கள் முன்னேறி மேலே செல்வோம்” என்று கூறி இருக்கிறார்.