இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா எல்லா காலத்திலும் சிறந்த இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்திருக்கிறார். அதில் அவர் பெருந்தன்மையுடன் செய்திருக்கும் ஒரு செயலால் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இந்திய டெஸ்ட் அணிக்காக மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் 7195 ரன்கள் புஜாரா எடுத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் ஓய்வு காலத்திற்குப் பிறகு உடனடியாக அவருடைய இடத்தை நிரப்புவதற்கு வந்து அதை செய்தும் காட்டி அசத்தியவர்.
என்னுடைய அணி இதுதான்
இதுகுறித்து புஜாரா பேசும் பொழுது ” என்னுடைய எல்லா காலத்திலும் சிறந்த இந்திய டெஸ்ட் அணியில் நான் வித்தியாசமான தொடக்க ஜோடியை தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஒருவர் மிகவும் ஆக்ரோஷமானவர் இன்னொருவர் மிகவும் தொழில்நுட்பத்துடன் நிதானமானவர். அவர்கள் யார் என்றால் வீரேந்தர் சேவாக் மற்றும் சுனில் கவாஸ்கர். மேலும் மூன்றாவது இடத்திற்கு நான் ராகுல் டிராவிட்டை தேர்வு செய்கிறேன். என் பெயர் வேண்டாம் அவர் என்னை விட சிறந்தவர்”
“மேலும் தற்போது விக்கெட் கீப்பர்களாக மகேந்திர சிங் தோனி மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ஆனால் நான் தோனியையே தேர்ந்தெடுக்கிறேன். ஏனென்றால் ஒரு கிரிக்கெட் வீரராக ரிஷப் பண்ட் இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறார். மேலும் ரிஷப் பண்ட் விளையாடி முடிக்கும் காலத்தில், அவரே தோனி உடைய இடத்தில் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.
புஜாராவின் அணி
புஜாரா தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் தன் பெயரை சேர்த்துக் கொள்ளாதது, மேலும் ராகுல் டிராவிட் தன்னைவிட சிறந்த வீரர் என நேர்மையாக ஏற்றுக் கொண்டதை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். மேலும் அவருடைய இந்த அணியில் அவருடைய காலத்தில் விளையாடிய விராட் கோலி, பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோருக்கும் இடம் கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஆர்சிபி டேபிள் டாப் கனவை இப்படித்தான் முடிச்சோம்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் – கம்மின்ஸ் பேட்டி
சிறந்த இந்திய டெஸ்ட் அணி : சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, விவிஎஸ் லட்சுமண், அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, கபில்தேவ் மற்றும் எம்எஸ் தோனி.






