டேவிட் வில்லிக்குப் பதிலாக யாரும் எதிர்பார்க்காத மூத்த இந்திய வீரரை கொண்டு வந்த ஆர்சிபி ; அதிர்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள்!

0
956
RCB

ஐபிஎல் 16ஆவது சீசன் பரபரப்பாக தற்பொழுது நடந்து வருகிறது. ப்ளே ஆப் சுற்றுக்கு நுழையும் நான்கு அணிகள் யார் என்பதற்கான போட்டி தீவிரம் அடைந்து இருக்கிறது!

இந்த நிலையில் எட்டுப் போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி நான்கு தோல்விகள் பெற்று 8 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இருக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏற்கனவே காயத்தால் சில முக்கிய வீரர்களை இழந்து உள்ள நிலையில், தற்பொழுது இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டேவிட் வில்லியையும் இழந்திருக்கிறது. காயம் காரணமாக இவர் மேற்கொண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது இவருக்கு பதிலாக யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அறியப்படுகிற கேதார் ஜாதவை ஒப்பந்தம் செய்திருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம்!

2010 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த இவரை கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

- Advertisement -

2018 ஆம் ஆண்டு சென்னை அணியால் 7.80 கோடிக்கு வாங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு வரை அந்த விலையில் சென்னை அணிக்கு விளையாடிய கேதார் ஜாதவ், அடுத்த ஆண்டு 2 கோடிக்கு ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். அதற்கு அடுத்து 2022ஆம் ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் இவர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.

2020 ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எட்டுப் போட்டிகளில் களம் இறங்கிய இவர் வெறும் 62 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 93 மட்டும்தான் இருந்தது. அடுத்த ஆண்டு ஹைதராபாத் அணிக்காக ஆறு போட்டிகளில் களம் இறங்கிய இவர் வெறும் 55 ரன்கள்தான் எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 103 தான்.

இப்படி மிக மோசமான செயல்பாட்டை கொண்டு இருந்த ஒரு மூத்த இந்திய வீரரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் மாற்று வீரராக அணி கொண்டு வந்தது குறித்து பெங்களூரு அணியின் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மேலும் சமூக வலைதளத்தில் மற்ற அணியின் ரசிகர்களால் கேலியும் செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!