சென்னைக்கு எதிரான போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து ஆடும் பெங்களூர் அணி – காரணம் இதுதான்

0
349
RCB wearing black armband

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் 22-வது போட்டி, சென்னை அணிக்கும், பெங்களூர் அணிக்கும் இடையே, நவி மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் சற்று முன் துவங்கி நடைபெற்று வருகிறது!

ஐ.பி.எல்-ல் என்றுமில்லாத வரலாறாய் தொடர் முதல் நான்கு தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வரும் சென்னை அணிக்கு இது முதல் வெற்றிக்கான மிக முக்கிய போட்டியாக அமைந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ பிளிசிஸ் பனிப்பொழிவின் காரணமாக பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் பெங்களூர் அணியின் முக்கிய வீரரான ஹர்சல் படேல் ஆடவில்லை. மேலும் பெங்களூர் அணி வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்!

காரணம் என்ன?

கடந்த மும்பை அணியுடனான ஆட்டத்தின் போது, பெங்களூர் அணியின் முக்கியப் பந்துவீச்சாளர் ஹர்சல் படேலின் சகோதரி திடீர் மரணமடைந்ததாகச் செய்தி வர, ஹர்சல் படேல் அணியை விட்டு வெளியேறி இருந்தார். இதன் பொருட்டு துக்கம் தெரிவிக்கும் வகையில் பெங்களூர் அணியினர் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடுகின்றனர்!